காரைக்கால் என்பது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் ஒரு முக்கிய துறைமுக நகரம்.இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி மாநிலம் முற்றிலும் வேறு பட்டது.இந்த மாநிலத்தின் நிலப்பரப்பு நாலு பிரதேசங்களாக தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் சிதறி சிதறி கிடக்கிறது.புதுச்சேரியின் பிரேதசங்களையும் அவை அமைந்திருக்கும் பிற மாநிலங்களையும் கீழே காணலாம்.
பிரேதேசம் மாநிலம்
புதுச்சேரி ------------------------------------------------------ தமிழ்நாடு
காரைக்கால்-------------------------------------------------- தமிழ்நாடு
மாஹி----------------------------------------------------------- கேரளம்
ஏனாம்----------------------------------------------------------- ஆந்திர பிரதேஷ்
இதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி தமிழ்நாடு மாநிலத்திற்கு இடையே அமைந்துள்ளது.இவை இரண்டு பகுதிகளும் ஒரே மாநிலத்தில் இருந்தாலும் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கோ அல்லது காரைக்காலில் இருந்து புதுச்சேரக்கோ பயணம் மேற்கொள்ளும் பொழுது நாம் 133 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டும்.அதுவும் சீர்காழியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் 43 கிலோமீட்டர் உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பயணமாக இருக்கும் (சாலை அவ்வளவு மோசமாக இருக்கும் ).
காரைக்கால் பெயர் காரணம்
காரைக்கால் காரைக்காடு ,காரைவனம் என்று அழைக்கப்பட்டது .காரைக்கால் கடற்கரையை ஒட்டிகாரைச்செடிகள் காடு போல் மண்டி இருந்ததால் காரைக்காடு என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் காரைக்கால் என்று வழங்கப்பட்டு இருக்கலாம்.
காரைக்கால் மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கரைக்கால் மாவட்டத்தில் 2,00,222 பேர் வசிக்கின்றனர்.இதில் பெண்கள் 97,809 மொத்த ஆண்கள் 1,002,413.கடந்த பத்து ஆண்டுகளில் அதாவது 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து இதுவரை 17.23 என்ற விகிதத்தில் மக்கள் தொகை உயர்ந்துள்ளது.காரைக்காலின் மக்கள் தொகை அடர்த்தி ஆனது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,275 பேர் என்ற அளவில் உள்ளது.
காரைக்கால் பாலின விகிதம்
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படிகரைக்காலில் 1000 ஆண்களுக்கு 1047 பெண்கள் வசிக்கின்றனர்.
காரைக்கால் எழுத்தறிவு விகிதம்
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கரைக்காலில் கல்வி அறிவு பெற்றவர்களின் சராசரி 87.05 சதவிகதமாக உள்ளது.
காரைக்கால் பரப்பளவு
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கரைக்கால் 157 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.
காரைக்கால் மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள சிறப்புகளையும் இந்த தளத்தில் விரிவாக காணலாம்.
அறிய வாய்ப்பு ! வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>