![]() |
A Sunset at Karaikal |
இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் (De - facto -merger of Pondicherry ) 1954 ஆம் வருடம் நவம்பர் 1ஆம் நாளில் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதன் தலைமை ஆணையாராக கேவல்சிங் நியமிக்கப்பட்டார் இருப்பினும் அதிகார பூர்வமான சட்டமுறை மாற்றுதல் ஒப்பந்தம் (Treaty of Cession ) 1956ஆம் ஆண்டு மே 28 ஆம் நாளன்று இந்தியாவின் சார்பாக பண்டித ஜவஹர்லால் நேருவும் ,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் ,பிரஞ்சு குடியரசு தலைவருக்காக அதன் இந்திய தூதுவர் ஸ்தானிஸ் லாஸ் ஆஸ்ட்ரோக்கும் (Stansis Ostrog ) கையெழுத்திட இனிதே நிறைவேரியது.
1962 ஆம் வருடம் மே 27 ஆம் நாளில் இந்த ஒப்பந்தத்தை பிரெஞ்சு பாராளுமன்றம் உறுதிப்படுத்தியது.அதற்குப்பிறகு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் 1962 ஆம் வருடத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும்,பிரஞ்சு தூதர் ழான் போல் கார்திவேயும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெலுத்திட
புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது . அன்றிலிருந்து புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வமாக (De -Jure ) இந்திய நாட்டில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
அறிய வாய்ப்பு ! வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>