தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பிரெஞ்சிந்திய அரசு ஆட்சிக் காலத்தில் திருநள்ளார் (பகுதி - I )

கி.பி 1817 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் அன்றிலிருந்து திருநள்ளாற்றில் ஒரு நிலையான பிரஞ்சிந்திய ஆட்சி ஏற்ப்பட்டு பிரெஞ்சு நாட்டு சட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக எங்கு செயல் முறைக்கு வந்தன.திருனள்ளாறு உட்பட அனைத்துக் காரைக்கால் பிரதேசமும் பிரெஞ்சு ஆட்சிக்கு மாறிவந்தது ஒரு நீண்ட நெடிய வரலாறு அதன் சுருக்கம் கீழே .

கி.பி 1739 பிப்.14
 தஞ்சாவூர் மன்னன் சகாஜி ,புதுச்சேரிக் கவர்னர் துய்மா (DUMAS) விடம் காரைக்கலையும் ,கருக்களாச்சேரி கோட்டையையும் ,அத்துடன் 5 கிராமங்களையும் (திருமலைராயன் -பட்டினம் ,கீழையூர் ,மேலையூர் ,புதுத்துறை ,கோவில்ப்பத்து ) 40 ஆயிரம் பொற்காசுகளுக்கு விற்றதால் பிரெஞ்சிக்கரர்கள் முதன்முதலில் இப்பகுதியில் காலுன்றி ஆட்சி அமைக்க ஆரம்பித்தனர்.

கி.பி 1740 பிப்.12
 தஞ்சாவூர் மன்னன் பிரதாப்சிங் காரைக்காலை அடுத்த மேலும் 8 கிராமங்களை பிரெஞ்சுக் காரர்களுக்கு 60 ஆயிரம் பொற்காசுக்கு விற்றார் .(காரைக்கால் மாகாணம் ஏற்ப்பட்ட விபரம் இதுவே )

கி.பி 1749 டி .ச .18
 தஞ்சாவூர் ஆட்சியிலிருந்த தவுஸ்த்கான் பிரெஞ்சுகாரர்களிடம்  அடுத்த 4 மாகாணங்களை (81 கிராமங்களை) விற்றார்.
திருநள்ளார்  - 31 கிராமம்
நல்லழந்தூர்  - 13 கிராமம்
நெடுங்காடு -29 கிராமம்
கோட்டுச்சேரி - 8 கிராமம்

குறிப்பு :முதன்முதலில் திருநள்ளாற்றில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி ஏற்ப்பட்டது 1749 டி .ச .18 ஆகும் .

1760 மார்ச் 
 பிரெஞ்சுக் காரர்களிடம் இருந்து மேற்கூறிய 5 மாகணங்களையும் ஆங்கிலேயர் ஆக்கிரமித்துக் கொண்டனர் .அப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி ! (திருநள்ளார் உட்பட )

இந்தப் பதிவு வரலாற்றில் திருநள்ளாற்றுத் தர்ப்பாரண்யேசுரர் திருக்கோவில் ஓர் ஆய்வு வெளியீட்டு எண் -4 என்ற ஒரு நூலில் உள்ள கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்டது.

மேலும் இந்தப்பதிவு பகுதி இரண்டாக தொடரும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...