தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் புணித தேற்றரவு அன்னை ஆலயம் |Some Information about Karaikal Lady of Angels Church

காரைக்கால் புணித தேற்றரவு அன்னை ஆலயத்தினை காரைக்கால் நகரின் ஒரு அடையாளம் என்றே சொல்லலாம்.இந்தியாவில் உள்ள பழமையான கிறிஸ்துவ ஆலயங்களில் இதுவும் ஒண்று.பொதுவாக காரைக்கால் மாதா கோவில் என்று கூறினால் மக்கள் அனைவராலும் அடையாளம் காட்டப்படுவது இந்த ஆலயமாகத்தான் இருக்கும்.காரைக்காலில் முக்கிய சாலைகளில் ஒன்று இதன் பெயரான மாதா கோவில் வீதி என்றே அழைக்கப்படுகிறது.இந்தியாவில் பிரெஞ்சு நாட்டின் கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையின் சான்றாக இது விளங்குகிறது.

சரி இதன் பெருமையைப் பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருப்போம் வரலாற்றையும்  சற்றுப் பார்ப்போம்.காரைக்கால் நகரம் பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்த பொழுது 1739ஆம் ஆண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டது.1960ஆம் ஆண்டு காரைக்கால் நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பொழுது இந்த ஆலயம் முழுவதுமாக இடிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.சில காலங்களுக்கு பிறகு மீண்டும் பிரெஞ்சுக் காரர்களால் 1770ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.அதன் பிறகு 1867ஆம் ஆண்டு ஆலயத்தினை அழகூட்டும் பொருட்டு பளிங்கு கல்லிளால் ஆன பலிபீடம் அமைக்கப்பட்டதாக சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

133 அடி உயர்ந்து நிற்கும் கோபுரத்தின் அழகினை மேலும் மெருகு ஏற்றும் வகையில் மூண்று (3) மிகப்பெரிய நேரம் காட்டும் கடிகாரங்கள் மற்றும் 5 மணிகள் அந்த 5 மணிகள் எழுப்பும் ஓசை 5 கிலோ மீட்டர் சுற்றளவு வரை கேட்க்கும் படி அமைக்கப்பட்டு 1891ஆம் ஆண்டு கட்டி  முடிக்கப்பட்டது.இன்று வரை ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் தேற்றரவு மாதா விழாவாக கொண்டாடப்பட்டு கொடியேற்றப் படுகிறது. 1991ஆம் ஆண்டு மணிக்கூண்டு கோபுரத்தின் நூற்றாண்டும் ஆலயத்தின் 250 வது ஆண்டும் விழாவாக கொண்டாடப்பட்டது.

திட்டத்தட்ட 275 ஆண்டுகள் பழமை வாய்ந்த புணித தேற்றரவு அன்னை ஆலயம் காரைக்காலில் இருப்பது நகர மக்கள் அனைவருக்கும் பெருமையே.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...