தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2015இல் என்னை கவர்ந்த தமிழ் திரைப்பட வசனங்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை காதல் மற்றும் உறவு,நட்பு சார்ந்த பாச வசனங்களுக்கு பஞ்சமே கிடையாது.2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில்  குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு சில வசனங்களே  சமுதாயத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் வண்ணம் அமைந்திருந்தது.அதிலும் சில வசனங்கள் மட்டுமே ஏதாவது ஒரு தேவை  சார்ந்த பிரச்சனையை பிடித்திக்கொண்டு பயணம் செய்யாமல் இன்றைய சமுதாயத்தில் வாழ்தல் குறித்த  பிரச்சனைகளை எடுத்து கூருவதாக அமைந்திருந்தது.நாம் இப்பொழுது அதைப்போன்ற ஒரு இரண்டு வசனத்தை தான் பார்க்க இருக்கிறோம்.

 காடு என்ற ஒரு தமிழ் திரைப்படம் இது  நவம்பர் 2014இல் வெளிவந்ததாக விக்கிபீடியாவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் நான் இந்த திரைப்படத்தை பார்த்தது 2015ஆம் ஆண்டில் தான்.காடு திரைப்படத்தில் சமுதரக்கனி பேசுகிற ஒவ்வொரு வசனமும் உண்மையில் இவர் ஒரு போராளிதானோ என்ற கேள்வியை நம் மனதில் ஆழமாக உள்ளீடு செய்து விடுகிறது. இதோ அவற்றுள் சில வசனங்கள்.

இந்த வசனம் அந்த படத்தில் இடம்பெறும் காட்சியில் சமுத்ரகனிக்கு விஷம் கொடுக்க சிறை காவலாளிகள் காத்திருப்பனர் அது அவருக்கும் தெரியும்.தனது இறுதி ஆசையாக விதார்தை பார்க்க விரும்பி அவரிடம் சில அறிவுரைகளை அனல் தெறிக்கும் வசனங்களாக கூறிக்கொண்டு இருப்பார்.இவர் பேசி முடித்தவுடன் விஷம் கொடுக்க காவலாலிகள் தயாராக இருப்பார்கள் இந்த விஷயம் விதார்துக்கு தெரியாது .காவலாளிகளில் ஒருவர் நேரம் ஆகிறது என்று கூற கோபத்துடன் பேச்சை முடிப்பார் சமுத்ரகனி அப்பொழுது விதார்த் நீ எப்ப வருவ என்று கேட்பார் அப்பொழுது தான் இந்த வசனம்.

"இந்த உலகத்துல இரண்டே இரண்டு பேரால தான் வாழ முடியும் ஒருத்தன் ஏமாத்துரவன் இன்னொறுத்தன் ஏமாந்தே பழகிப்போனவன். என்னால ஏமாத்தவும் முடியாது ஏமாறவும் முடியாது"
இதே திரைப்படத்தில்  சமுத்ரகனி பேசும் இந்த வசனம் போராட்டம் ,சமாதானம்,அதிகாரம் மூன்றையும் தொடர்பு படுத்தியுள்ளது.இந்த வசனம் இடம் பெரும் காட்சியை நான் சொல்ல மாட்டேன்.கானொளியில் காணுங்கள்.

"போராட்டம்னு ஒன்னு ஆரம்பிச்சிட்டா வெற்றி இல்லனா தோல்வி  சமாதானம்னு ஒன்னு இருக்கவே முடியாது,நாம சமாதானமா போயிட்டா அடிபட்டவன் சரியாயிடுவான.உலக சரித்திரத்துல எங்கெல்லாம் சமாதானம் முன் வைக்கப்பட்டதோ அங்கெல்லாம் அதிகாரம் தான் ஜெயிச்சிருக்கு.சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எல்லோரும் அந்த அதிகாரத்த காட்டத்தான் முயிற்சிப்பாங்க"


இந்த வசனத்தை நான் கேட்ட பொழுது திரும்ப திரும்ப யோசித்தேன்.ஒருசில அரசாங்க அலுவலகங்களுக்கும்,கல்லூரிகளுக்கும் ஏன் பல தேசங்களுக்கு இது கண்டிப்பாக பொருந்தும்.

இன்னும் இந்த திரைப்படத்தில் நிறைய வசனம் உண்டு.அவற்றுள் பல வசனங்கள் ஊடகங்களில் பிரபலம்,நிறைய பகிரப்பட்டு உள்ளது.இவை இந்தத் திரைப்படத்தில் என்னை கவர்ந்த வசனங்கள்.உங்களை கவர்ந்த வசனங்கள் இருந்தால் கூறுங்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...