தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மானிய விலை காஸ் சிலின்டர் ரத்து மத்திய அரசு அதிரடி

நம் நாட்டை பொறுத்தவரை மழை வெள்ள நிவாரணமும் சரி மானிய விலை காஸ் சிலிண்டரும் சரி அனைவருக்கும் சமமாகதான் வழங்கப்படுகிறது. ஆட்சியாளர்களை பொறுத்தவரை ஏழை,பணக்காரன் என்கின்ற பேதம் இந்த ஒரு விஷயத்தில் கிடையாது அவர்களுக்கு ஒரு மனிதன் என்பவன் ஒரு ஓட்டு அவ்வளவு தான் (1 மனித உயிர் =1 ஓட்டு).ஆட்சியாளர்கள் என்று நான் குறிப்பிட்டது அரசியல் தலைவர்களை தான் அரசு அதிகாரிகளை அல்ல.ஆனால் மத்திய அரசு அறிவித்துள்ள "மானிய விலை காஸ் சிலின்டர்கள்  ரத்து" என்னை அதிர்சிக்கு உள்ளாக்கியது .உண்மையில் இது ஒரு தைரியமான முடிவு தான்.

ஆண்டு வருமானம் ரூபாய் 10 லட்சத்தை தாண்டுபவர்களுக்கு இது வரையில் வழங்கப்பட்டு வந்த மானிய விலை காஸ் சிலிண்டரை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பரதான் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...