தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

அனைத்து பல்கலைக்கழகத்திலும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்-யூ.ஜி.சி

பல்கலைக்கழக மானியக் குழு (University Grant Commission) என்று சொல்லப் படக்கூடிய யூ.ஜி.சி யின் தலைவர் வேத் பிரகாஷ் ஊடகங்களுக்கு நேற்று அளித்த செய்தியில் "அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள அணைத்து பல்கலைக்கழகங்களும்  ஆன்லைன் சேர்க்கை அமைப்பு (Online Admission System ) தங்களிடம் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் இதைப்பற்றி அவர் கூறுகையில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுவது பெற்றோர்களுக்கும்,மாணவர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.இதுவரை ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்தி வரும் பல்கலைக்கழகங்கள் இனி வரக்கூடிய காலங்களில் அணைத்து படிப்புகளுக்கும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை சேவையை  வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...