தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலை தொடர்ந்து புறக்கனித்துவரும் தமிழக ஊடகங்கள்

காரைக்கால் கடற்கரை சாலை மழை வெள்ளத்தில்
காரைக்கால் -சீர்காழி பாலம் சரிசெய்த பிறகு
கடும்மழையால் கடலோர தமிழகமே தவித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில்.சென்னையை தவிர மற்ற கடலோர நகரங்களை தமிழக ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை என்று பல்வேறு தரப்பினரும் தங்கள் அதிர்ப்தியை சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்து இருந்தனர்.ஒரு பக்கம் கடலூர் மக்கள் நாங்களும் தமிழகத்தில் தான் உள்ளோம் எங்களையும் கொஞ்சம் உடகங்களில் காட்டுங்கள் என்று வெளிப்படையாகவே பேச. அதை கேள்விப்பட்ட சில அரசியல் பிரபலங்கள்,நடிகர்கள் உடனே அங்கு விரையவே அவர்களுக்கு பின்னால் சென்ற சில தமிழக தொலைக்காட்சி ஊடங்கங்கள் கடந்த இரண்டு நாட்களாக கடலூரில் நடந்த வெல்ல பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தன.

 நடந்தவைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க ,காரைக்காலில் கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் வார தொடக்கத்தில் சரியாக சொல்ல வேண்டும் என்றால் 07/11/2015 அன்று ஆரம்பித்த மழை இன்று வரை விடுவதாக தெரியவில்லை நடுவில் ஒரு சில நாட்கள் மழை ஒய்வு எடுத்துகொண்டாலும் அதன் பாதிப்பு மக்களை வதைத்துக் கொண்டுதான் இருந்தது இதனிடையே கடந்த வாரத்தில் இருந்தே வானிலை அறிக்கையில் திரு ரமணன் அவர்கள் காரைக்காலில் மழை அதிகமாக இருக்கும் என்றே கூறி வந்தார் அதற்கேற்ப மிக கனமழை பெய்து வந்தது.நேற்று தென்-கிழக்கு  கடலூர மாவட்டங்களில் அதிக பட்சமாக காரைக்காலில் 16 செ.மீ மழை பெய்துள்ளது ஆனால் காரைக்கால் வெள்ளம்,மீட்பு நடவடிக்கை மற்றும் நிவராணம் பற்றி எந்த தமிழக செய்தி ஊடகமோ கண்டுகொண்டதாக தெரியவில்லை.இதற்கு முக்கிய காரணம் காரைக்கால்(புதுச்சேரி மாநிலம் ) தமிழகத்தை சேர்ந்த மாவட்டம் இல்லை புதுச்சேரி மாநிலத்தில் 90% மக்கள் பார்ப்பது தமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகளை தான் ஆனால் தமிழக முதல்வராக விரும்புபவருக்கு இங்கு இருக்கும் மக்களின் ஒட்டு பயன்படாது.மொத்தத்தில் தமிழக ஊடகங்கள்(குறிப்பாக தொலைக்காட்சி) தமிழக அரசியல் கட்சிகளை சார்ந்தே இருக்கிறது.இந்த ஊடகங்களின் செய்தியில் எப்படி நேர்மை இருக்க முடியும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...