தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி,காரைக்காலை தமிழகத்துடன் இணைக்க நடந்த முயற்சிகள்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை தமிழகத்துடனும்,மாஹியை கேரளாவுடனும்,யானாம் பகுதியை ஆந்திர மாநிலத்துண்டன் சேர்க்க வேண்டும் என்ற அறிக்கையை 1978ஆம் ஆண்டு அப்போதைய பாரத பிரதமராக இருந்த மொராஜிதேசாய் வெளியிட்டார்.

அந்த அறிக்கையை எதிர்த்து  வ.சுப்பையா என்பவரின் தலைமையில் 1978ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் "புதுச்சேரி இணைப்பு மறுப்பு இயக்கம்" உருவாக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் அனைத்து அரசியில் கட்சிகள்,மாணவர்கள்,அரசு அலுவலர்கள் இணைத்து போராடினர்.போராட்டம் மிக பெரிய அளவில் வளர்ந்தது.இதனிடையே 1979 ஜனவரி 26,27 இல் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் விளைவாகக் காவல் துரையின் தடியடியிலும்,துப்பாக்கிச்சூட்டிலும் 25 பேர் உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அப்பொழுது புதுச்சேரி மாநிலத்தின் பாராளமன்ற உறுப்பினராக இருந்த பாலாபழனூர்,புதுச்சேரி இணைப்புக்கு ஆதரவாக செயல்பட்டார்.

பிறகு ஜனதாக் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...