தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

இந்தியாவில் ஓபன் புக் தேர்வுகள் ஒரு பார்வை (பாகம் -I )

ஓபன் புக் தேர்வுகள் இந்த வார்த்தையே இந்தியாவிற்கு  புதிதான ஒன்று.தேர்வுகளின் பொழுது புத்தகத்தை உபயோகிப்பது தேர்வு விதிகளுக்கே விரோதமாக கருதப்படுகிறது.ஆனால் உண்மையில் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் எல்லாம் பல பல்கலைக்கழகங்களில் இது சட்ட விரோதமான ஒன்றாகக் கருதப்படுவது இல்லை.புத்தகங்கள் என்பதே அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளத்தான்.அந்த புத்தகத்தை மனப்பாடம் செய்து தேர்வின் பொழுது கேட்க்கப்படம் கேள்விகளுக்கு விடை எழுதுவதும் அதற்கு அதே புத்தகத்தில் உள்ள தகவல்களை கொண்டு தயார் செய்யப்பட்ட விடைக்குறிப்பு (Answer Key) வுடன் ஒப்பிட்டு மதிப்பெண் வழங்கும் முறையும் எப்படி சரியான ஒன்றாக இருக்க முடியும்.இதைப் போன்ற தேர்வு முறையால் மாணவர்களின் நினைவாற்றலை சோதிக்க முடியுமே தவிர அவர்களின் அறிவுத்திறனை சோதிப்பது சாத்தியமற்ற ஒன்று என்பது பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் வழங்கும் சமூகத்தில் மாணவர்களுக்கு எப்படி ஒரு புத்தகத்தை பயன்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்வது என்பதையே நாம் சொல்லிக்குடுக்க மறந்து விட்டோம்.இன்று பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்ய அவர்களை ஒரு தேர்வு எழுதும் எந்திரமாகவே மாற்றி விடுகின்றனர்.அவர்களை மட்டும் குற்றம் சொல்லி ஒன்றும் ஆக போவதில்லை மாணவர்களின் பெற்றோர்களே அதை தான் விரும்புகிறார்கள்.சரி,இதெல்லாம் ஓபன் புக் தேர்வுகள் மூலம் சரியாகி விடுமா ? என்று கேட்கிறீர்களா.இதற்கு பதில் இல்லை என்பது தான்.நமது பாடம் கற்பிக்கும் முறையிலும்,கேள்விகள் தயார் செய்யும் முறையிலும்,மதிப்பெண்கள் வழங்கும் முறையிலும் மாற்றம் தேவை.இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த விஷயத்தில் கல்வி பற்றிய சமூக பார்வையிலேயே மாற்றம் ஏற்ப்பட வேண்டும்.

தேர்வுகளுக்கான கேள்விகளை தயார் செய்யும் பொழுது அந்த துறையில் சமூகத்தின் இன்றைய தேவைகளையும்,எதிர்பார்ப்புகளையும்  கருத்தில் கொள்ள வேண்டும்.கேள்விகள் நேரடியாக இருக்கக் கூடாது.மாணவர்கள் தங்கள் அறிவுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இருத்தல் அவசியம்.மாணவர்களின் செயல்த்திறன் ஆற்றலை அறிந்து கொள்ளும் வகையில் இருத்தல் வேண்டும்.

சரி,இந்த விவாதத்தில் நான் சொல்ல வந்த செய்தியையே சொல்ல மறந்து விட்டேன்.இன்று இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஓபன் புக் தேர்வுகளை நடத்தும் கல்வி வாரியங்கள் தங்கள் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கக் கூடாது என அறிவுறித்தியுள்ளது.அப்பொழுது கருணை மதிப்பெண்கள் வழங்குவது மத்திய அரசுக்கே தெரியும் போல.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...