தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள உள் விளையாட்டு அரங்கம்

காரைக்கால் மாவட்டத்தில் சிறிது காலமாக முன் அறிவிக்கிப் பட்ட வளர்ச்சிப் பணிகள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாக நிறை வேற்றப்பட்டு வருகிறது.அவற்றுள் ஒன்றாக 1500 பேர்கள் அமர்ந்து பார்கக் கூடிய உள் விளையாட்டு அரங்கம் நேற்று காரைக்காலில் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 3600 சதுர மீட்டர்கள் பரப்பளவில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த உள் விளையாட்டு அரங்கில் அணைத்து இடங்களிலும் தொடர் நீண்ட நிழல் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன .அது மட்டும் அல்லாது வீரர்களுக்கான அறைகள் ,பயிற்சியாளர்களுக்கான அறைகள்  மற்றும் அலுவலக அறைகள் என தனித்தனியே உள்ளது.விளையாட்டு வீரர்களுக்கு  முழங்கால் வலி வராமல் தவிர்க்க கலிபோர்னியாவில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்ட பனை மரங்களைக் கொண்டு விளையாடும் தரையை அமைத்து இருக்கிறார்கள்.சர்வதேச தரத்திற்கு இணையாக இதை சென்னையை சேர்ந்த இந்திய தொழில் நுட்ப கழகத்தினர் வடிவமைத்து இருப்பதாக தி ஹிந்து செய்தித்தாள் நிறுவனம் தனது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது.
திறந்த வெளி விளையாட்டு அரங்கம் 
இந்த திட்டம் நீண்ட நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப் பட்டு நிறைவடையாமல் இருந்து வந்தது.இந்நிலையில் HUDCO மூலம் ரூபாய் 8 கோடியே 35 லட்சம் நிதி பெறப்பட்டு அதற்கான TENDER விடப்பட்டு நாளை அதற்கும் சேர்த்து பூமி பூஜை நடத்த இருப்பதாக தகவல்.

விளையாட்டு அரங்கத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகள் விரைவில் வேறொரு இடுக்கையின் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...