தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலை வந்தடைந்த இலவச மிக்சி மற்றும் கிரைண்டர்கள்

கடந்த 2011ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின் போது தற்போதைய புதுவை முதல்வர் திரு.N.ரங்கசாமி அவர்களால் அறிவிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒரு மிக்சி மற்றும் கிரைண்டர் திட்டம் நீண்ட நாட்களாக நிறைவேற்றப் படாமல் கிடப்பில் கிடந்தது.இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் புதுச்சேரியில் இந்த திட்டம் புத்துயிர் பெற்று இருப்பதாக அறிவிக்கப் பட்டது.அங்குள்ள அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் கசிந்தன.

பொங்கல் பரிசுப் பொருளையே பொங்கலுக்கு பிண் தான் காரைக்கால் மக்கள்  கண்ணில் காட்டினார்கள்.இந்தப் பரிசுப் பொருட்களையே காரைக்காலில் வழங்கி விட்டதாக கையொப்பம் வாங்கிக் கொண்டனர்.இங்கே புதுச்சேரி காரைக்கால் ஒரே மாநிலத்தில் இருந்தாலும்.அரசு வேலைவாய்ப்பு,புதிய திட்டங்கள்,மத்திய அரசின் நிதி என அனைத்திலும் புதுச்சேரிக்கே முக்கியத்துவம் அழிக்கப்பட்டு வருகிறது.அதைப் போன்று இந்த இலவச மிக்சி,கிரைண்டர் வழங்கும் விஷயத்திலும் காரைக்கால் புறக்கணிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் திடிரென 10,000 மிக்சிகள் மற்றும் 9,000 கிரைண்டர்கள் காரைக்காலை வந்தடைந்து இருக்கின்றன.மேலும் மீதும் உள்ள 1000  கிரைண்டர்கள் நாளை வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் வழங்கப்பட வேண்டிய 2000 மிக்சி மற்றும் கிரைண்டரகள் அடுத்த சுற்றில் தருவதாக முதல்வர் கூறியுள்ளாராம்.

வந்த மிக்சி கிரைண்டர்களில் பல பாகங்கள் சேதம் அடைந்து உள்ளதாக அருகே இருந்த மக்கள் தெரிவித்தனர்.ஒரு வேலை நல்லவைகளை எல்லாம் புதுச்சேரியில் வழங்கி விட்டு மீதம் உள்ள பொருட்களை காரைக்காலில் வழங்குவார்கள் போல

ஆமாம் தரம் இல்லாத பொருட்களை  வைத்து என்ன செய்வது ? இன்னுமா உங்கள் நினைவுக்கு வரவில்லை ................................அதேதான்    "பழைய இரும்பு சாமான் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பலம் ".

சிந்தியுங்கள் நண்பர்களே இந்த இலவசங்கள் தேவை தானா.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...