தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் சுனாமி நினைவுகள் பாகம் -I I

இது முதல் பாகத்தின் தொடர்ச்சி நீங்கள் முதல் பாகத்தை படிக்க விரும்பினால் காரைக்கால் சுனாமி நினைவுகள் பாகம் -I  க்கு செல்லவும்.

பாகம் -I I தொடர்கிறது

பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த பேருந்து காரைக்காலை  கடந்தது.கல்லூரி பருவத்தில் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில்  Idustrial Visit   என்ற பெயரில் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் இணைந்து பேருந்தில் கூட்டமாக வெளியூர்களுக்கு சென்று  எந்த industry யும் பார்க்காமல் ஊர் சுற்றி விட்டு வருவது ஒரு வித இன்பம். அந்த மகிழ்ச்சியை இதனுடன் ஒப்பிட முடியாது ஆனால் பேருந்தில் நாங்கள் செய்த சேஷ்டைகளுக்கும் குறும்புகளுக்கும் பஞ்சமே இல்லை.எனக்கு ஜன்னல் ஒர இருக்கை,மார்கழி மாதம்  என்பதால் பணி அதிகமாக இருந்தது.நான் சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு குளிரை அனுபவித்தேன் என் நிலை "விடியும் பொழுது உறையும் பணியில் உல்லாச உறக்கம் " என்று இருந்தது.

திடிரென செந்தில் தனது கைப்பேசியில் அதிர்ச்சியுடன் பேச ஆரம்பித்தான்.எங்கள் நண்பர்களில்  அவனிடம் மட்டுமே அன்று கைப்பேசி இருந்தது.என்னைப் பார்த்து சிறிது நேரம் யோசித்த அவன் "சென்னையில நிலநடுக்கமாம் ,காரைக்கால் அரசலார் பாலம் உடைந்ததாம்" என்று சிரித்துக்  கொண்டே கூறினான்.எனக்கு இவன் பொய் சொல்கிறான் என்று தோன்றியது.பேருந்து புதுச்சேரி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது பேருந்து நிலையம் எங்கும் ஒரே குழப்பான மனநிலையுடன் மக்கள் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு இருந்தனர்.ஒரு பேருந்து நடத்துனரிடம் இந்த பேருந்து சென்னை போகுமா என்று கேட்டோம்.அதற்கு அவர் ECR வழியாக வண்டி போகாதுப்பா என்று கூறிவிட்டார் .மக்கள் குறுக்கும் நெருக்குமாக அலைந்து கொண்டே இருந்தனர்.எங்களுக்கு மிகவும் பதட்டமாக  இருந்தது.நாங்கள் உடனே அவசரமாக சென்று இன்னொரு பேருந்தில் ஏறினோம் .அது தாம்பரம் வழியாக சென்னை செல்லும் பேருந்து.சிறிது நேரத்தில்  வண்டி புறப்பட்டது.என் மனம் மீண்டும் குழப்பம் அடைய ஆரம்பித்தது முன்பு எனக்கு பொய் என்று தோன்றிய செந்தில் கூறிய விஷயம் என் உண்மையாக இருக்க கூடாது என்று எண்ணத்தோன்றியது.என் மனதிற்குள் நானே கூறிக்கொண்டேன்.வீட்டிற்கு தொலைபேசியில் பேச வேண்டும் என்று எண்ணினேன்.ஆனால் செந்தில் கைப்பேசியில் charge இல்லை.பேருந்தில் என்னுடன் பயணம் செய்து கொண்டிருக்கும் என் நண்பர்கள் யாவருக்கும் சென்னை புதிது எங்கே செல்ல வேண்டும் என்றே தெரியாது.நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.அதனால் பேருந்தை குரோம்பேட்டையிலேயே நிறுத்தி இறங்கி விட்டேன்.

குரோம்பேட்டையில் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் நான் தேடி சென்றது தொலைபேசியை தான் ஒரு கடையிலிருந்து காரைக்காலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன்.ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.எனக்கு மட்டும் இல்லை என் நண்பர்களுக்கும் இதே நிலை தான்.நாங்கள் அனைவரும் பயந்து விட்டோம்.அப்பொழுது அந்த வழியாக வந்த ஒருவர் "கடல் உள்ளே வந்து விட்டது என்றார்" எனக்கு ஒன்றும் புரியவில்லை.என் அத்தை வீடு குரோம்பேட் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் தான் உள்ளது.அங்கு சென்றேன் அப்பொழுது தான் எனக்கு உண்மையே புரிந்தது.என்ன புரிந்தது என்றால் கடல் அலை ஊருக்குள்ளே வந்துவிட்டது அவ்வளுவுதான் .பின்னர் சென்னையில் நடந்த நிலநடுக்கத்தை பற்றி விரிவாக கூறினர்.அணைத்து விஷயங்களையும் கேட்டுக்கொண்டேன்.பிறகு மத்திய உணவு முடித்து விட்டு நாங்கள் தங்க இருக்கும் கே.கே நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுசுக்கு புறப்பட்டோம் எங்களுக்கு வழி தெரியாது என்பதனால் எனது மாமாவும் உடன் வந்தார்.

கே.கே நகர் செல்லும் வழியில் கிண்டி அருகே அ .. ஆ திரைப்படத்தின் பேனர் பிரமாண்டமாக வைக்கப்பட்டு இருந்தது எஸ்.ஜே.சூர்யாவின் இந்த திரைப்படம் தான் பிறகு அன்பே ஆருயிரே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியானது .ஆ வென வாயைபிழந்து அந்த உயரமான பேனரை பார்த்துக்கொண்டே சென்றோம்.இறுதியாக நாங்கள் தங்க வேண்டிய பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுசை அடைந்தோம்.காரைக்காலில் இருந்து நீங்கள் தங்குவதாக FAX வரவில்லை என்று ஒரு மணி நேரம் நிக்க வைத்துவிட்டான் ஒருவன்.ஒரு வழியாக எல்லா பிரச்சனைகளையும் கடந்து தங்கும் அறைக்குள் நுழைந்து விட்டோம்.மெத்தையில் சாய்ந்தபடி  தொலைக்காட்சியை பார்த்த பொழுது சென்னை -300,நாகப்பட்டினம் -800 ,வேளாங்கண்ணி -400 ,கடலூர் -200,புதுச்சேரி -150 என நகரமும் எண்களும் வரிசையாக போடப்பட்டு இருந்தது.சிறிது நேரம் கழித்து ஆடி பேரழையின் காரணமாக 1000 பேருக்கு மேல் உயிரிழப்பு என்றனர் .அப்பொழுது தான் புரிந்தது இது எல்லாம் இதுவரையினில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை என்று ,நாங்கள் அதிர்ந்து போனோம்.காரைக்காலில் உள்ளவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்ற பயம் எங்களுக்குள்.

நாங்கள் காரைக்காலில் உள்ள உறவினர்களிடம் எப்படி பேசினோம்.காரைக்காலில் என்ன நடந்தது.நாங்கள் Training சென்றோமா அனைத்திற்கும் விடை ஒரு புதிய பதிவாக  காரைக்கால் சுனாமி நினைவுகள் பாகம் -I I I இல் அதுவரை எங்களுடன் இணைந்திருங்கள்.

காரைக்கால் சுனாமி நினைவுகள் -பாகம் -
காரைக்கால் சுனாமி நினைவுகள் -பாகம் -I
காரைக்கால் சுனாமி நினைவுகள் -பாகம் -I
காரைக்கால் சுனாமி நினைவுகள் -பாகம் -I
காரைக்கால் சுனாமி நினைவுகள் -பாகம் -I

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...