தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

இரவில் மின்னும் காரைக்கால் கடற்கரை பூங்கா

ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு காரைக்கால் கடற்கரைக்கு சென்றிருந்தேன் அங்கே உள்ள பூங்காவில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் ஏதோ பராமரிப்பு பணி நடைபெறுவதாக எண்ணி வந்துவிட்டேன்.அதற்கு மறுநாள் சென்றபொழுது சாலை எது பூங்கா எது என்று கூட தெரியவில்லை பூங்காவின் வெளிப்பரப்பில் நட்டு வைக்கப்பட்டு இருந்த கம்பிகளில் முக்கால் வாசியை காணவில்லை.பிறகு நேற்றைய முன் தினமும் சென்றேன் அப்பொழுது அந்த கம்பிகள் எல்லாம் திரும்ப நட்டு வைக்கப்பட்டு சீரியல் செட்கள் எல்லாம் போட்டு அழகாக இருந்தன குறிப்பாக அங்குள்ள மரங்களில் எல்லாம் மின் விழக்குகளால் மிக அழகாக ஜோடித்து இருந்தாகள்.மீண்டும் நேற்று சென்றேன்.கடற்கரை சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுதே அமைச்சர் சிவா அவர்களும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் அவர்களும் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இறங்கினர்.சரி என்று நான் கடற்கரை பூங்காவுக்கு சென்று புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன் திடிரண அங்கு இருந்த இரு அரசு அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் வேகமாக புறப்பட்டு சென்றனர்.என்னுடைய  கைபேசி கேமரா சொல்லும் அளவுக்கு தரமானதாக இல்லை.எப்படியோ புகைப்படத்தை எடுத்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன் விருந்தினர் மாளிகையின் வாயிலில் அரசு உயர் அதிகாரிகள் வாகனமாக நின்றது.அங்கிருந்த காவலர்களில் ஒருவர் முதலமைச்சர் வருவதாக கூரிக்கொண்டு இருந்தார்.நான் எதையும் அங்கு நின்று கவனிப்பதாக இல்லை.அருகில் இருந்த BSNL ஆபீசை கடந்தவுடன் அடுத்த வாகனம் அது காரைக்கால் முதலமைச்சர் என்று அனைவரும் பாசத்தோடு அழைக்கும் நமது ஏ.எம்.அச்.நாஜிம் நானா அவர்கள்.சரி அங்கிருந்து இன்னும் சிறு தூரம் கடந்து
M .O .H பெட்ரோல் பங்க் அருகில் சென்றுகொண்டு இருந்தால் இன்னொரு வாகனம் அதில் கோட்டுசெரி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் அவர்கள்.அதன் பிறகு நான் போக வேண்டிய சாலையில்  செல்லாமல் வேறு வழியே வீடு திரும்பி விட்டேன்.சரி இதனால் என்ன ஏன் இதை பதிவு செய்து ஒரு இடுக்கை ஆக்குனீர்கள் என்று கேட்கிறீர்களா.சொல்கிறேன் இதில் இருந்து நான் என்ன யோசித்தேன் என்றால்.

  • ஒரு  மாதம்  திட்டமிட்டு,குறைந்த பட்சம் இரண்டு மாதங்கள் பணியாற்றி முடிக்க வேண்டிய ஒரு காரியத்தை முதலமைச்சர் வருவதால் ஒரு வாரத்துக்குள் முடித்தால் அதன் தரம் என்னவாக இருக்கும்.(தற்காலிக சாலைகள் போல இது தற்காலிக பூங்காவோ )
  • காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் இல்லாத பொழுது குரல் குடுப்பவர்கள் அவர் காரைக்கால் வரும்பொழுது ஒன்றுமே செய்வதில்லை(எங்கே இருக்கிறார்கள் என்றே தெரிவதில்லை).இங்கே உள்ள பிரச்சனைகள் அவருக்கு தெரியப்படுத்தப்படுகிறதா.
காரைக்காலில் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் அதில் இருவர் மந்திரிகளாக வேறு இருக்கிறார்கள்.ஒரு நாள் கடற்கரை பூங்கா மின்னினாள் மட்டும் இங்கு உள்ள பிரச்சனைகள் யாவும் தீர்ந்துவிடுமா.

இதற்கு காலமும்,வாக்களிக்கும் இயந்திரமும் தான் பதில் சொல்லும்.இதோ காரைக்கால் கடற்கரையில் எடுத்த ஒரு சில புகைப்படங்கள் கீழே.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...