தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் செய்யிதினா ஹாஜி ஷாஹ் அலி இமாம் திவான் மஸ்தான் செய்யிது தாவூது புகாரி ஒலியுல்லாஹ் தர்கா

நமது காரைக்கால் நகரின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று  செய்யிதினா ஹாஜி ஷாஹ் அலி இமாம் திவான் மஸ்தான் செய்யிது தாவூது புகாரி ஒலியுல்லாஹ் தர்கா.இங்கு நல்லடக்கம் செயப்பட்டு இருக்கும் மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஷஃபான் மாதம் 9ஆம் பிறை தொடங்கி பதினான்கு  நாட்கள் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.மஸ்தான் சாஹிப் மறைவுற்றதற்கு அடுத்த ஆண்டாகிய ஹிஜ்ரி 1245 ஆண்டு முதல் (கி.பி.1825) கடந்த 189 ஆண்டுகளாகக் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவுலியாக்கள் என்பவர்கள் யார் ? 
முகமதுநபி அவர்களின் மறைவுக்கு பிறகு,இஸ்லாமியக் கொள்கைகளை உலகெங்கும் பரப்பத் தோன்றிய இறைநேசச் செல்வர்கள் அவுலியாக்கள். ஆண்டவரின் பேரருளைப் பெற்ற இந்த அவுலியாக்கள் , திருக்குர்ஆன் கருத்துக்களையும்,இஸ்லாமியத் தத்துவங்களையும் மக்களுக்கு எடுத்து இயம்பியதோடு,'கறாமத்துக்கள்' எனப்படும் அற்புதங்கள் நிகழ்த்தி மக்களின் துயரங்களையும் போக்கி வந்தனர்.

மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் வரலாறு 
மஸ்தான்  சாஹிப் ஒலியுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரி 1124ஆம் ஆண்டு (கி.பி.1704) ஷஃபான் மாதம் 19 நாள் துருக்கி நாட்டின் தலைநகரான புகாரா என்னும் நகரில் பிறந்தார்.சிறுவயதிலேயே சிறந்த புலமை பெற்று விளங்கிய மஸ்தான் சாஹிப் அவர்கள் தனது ஏழாவது வயது முடிவதற்குள் திருக்குர்ஆன் முழுவதையும் கற்று மனனம் செய்தார்.இருபது வயதிற்குள் மார்க்கக்கல்வியும் உலகியல் கல்வியும் கற்றுக் கல்விமானாக விளங்கினார்.இவரது புலமை அறிந்த அந்நாட்டு மன்னர் ,தனது முதலமைச்சராக இவரை நியமித்தார்.தனது பணிக்காலத்தில் செய்குல் இஸ்லாம் என்பவரின் சீடராக இருந்து மெய் ஞான அறிவையும் பெற்றுனர்ந்தார்.செய்குல் இஸ்லாமின் அறிவுறுத்தலின் படி மேலும் ஞான அறிவை பெறும் வகையில் ,மற்றறொரு ஞான குருவை தேடலானார்.


மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் வரலாறு அவர்கள் இந்தியா (தமிழகம்) வரக்காரணம் ?
ஒரு நாள் 'இஷா' தொழுகைக்குப்  பிறகு ,கண்ணயர்ந்த செய்யிது தாவுதுவின் கனவில் அப்துல் காதிர் இபுனு அபுசாலிஹ் என்ற ஞானாசிரியர் தோன்றி,"செய்யிது தாவுதே !ஷா இமாம்திவானே ! அஞ்சற்க ! நான் வாழும் திருசிராப்பளிக்குப் புறப்பட்டு வருக " எனத்திருவாய் மலர்ந்தருளினார்.வரும் வழியில் ஞானகுருவைத் தேடி அலைந்த செய்யிது இப்ராஹிம் ஆரிபு என்ற அறிஞரைத் தன் சீடராக ஏற்றுக்கொண்டு,இருவரும் காந்தகார் வழியாக இந்தியாவிற்குள் வந்தனர்.

மேலும் மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் அவர்கள் செய்த அற்புதங்கள் ,புதுமைகள் சந்தித்த நிகழ்வுகள் ஒரு புதிய பதிவில் தொடரும்.அதுவரை www.karaikalindia.com உடன் இணைந்திருங்கள். 

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...