தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி:ஆய்வக உதவியாளர் பணி முடிவு

காரைக்கால் சுரக்குடியில் இயங்கிவரும் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணிக்கான முடிவு வெளியிடப்பட்டது.ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை.சொசைட்டி என்றால் எழுத்து தேர்வு ,நேர்முகத்தேர்வு என்று எதுவம் தேவை இல்லை போல.விண்ணப்ப நாள் முடிந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகிறது .அரசு நினைத்திருந்தால் விண்ணப்பங்களின் தகுதிக்கேற்ப வரிசை அடிப்படையிலான பட்டியிலை ஓரிரு மாதத்திற்குள் கல்லூரியின் இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கலாம்.அதையும் செய்யவில்லை.இதுக்கு எதுக்கு அரசே பொறியியல் கல்லூரி நடத்தனும் என்று கேட்கும் அளவுக்கு உள்ளது.

ஒருவேளை இதற்காக தான் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அணைத்து அரசு சார்ந்த கல்லூரிகளும் சொசைட்டிகளாகவே வைக்கப்பட்டு உள்ளனவோ என்னவோ.வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.இந்த அரசு மக்களுக்கு சாபக்கேடு என்று பலதரப்பட்ட மக்கள்களும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில்.இதைப்போன்ற நிகழ்வுகளால் புதுச்சேரி மாநில இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மனதளவில் மிகபெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள்.இதற்கு மிகப்பெரிய காரணமாக சொல்லப்படுவது அளவில்லாத மானியங்கள்.

ஏதேதோ  விஷயத்துக்கெல்லாம் பென்ஷன் ,உதவி தொகைன்னு தாரனுங்க.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பத்து ஆண்டுகளாகியும் எந்த நேர்முகத்தேர்வு வாய்ப்பும்,வேலையும்  வழங்காத பட்சத்தில் அந்த நபருக்கு உதவித்தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும்.இது வளர்ச்சி அடைந்த பல நாடுகளில் இன்றும் அமலில் உள்ளது.இப்படி செய்தால் தான் இந்த கொடுமைக்கெல்லாம் ஒரு தீர்வு உண்டாகும் என்று இளைஞர்களே வாய் திறந்து கேட்கும் அளவிற்கு புதுச்சேரி அரசு செயல்பட்டு வருவது மிகுந்த மன வேதனை அளிப்பதாக பல சமூக ஆர்வலர்கள்  தங்கள் கருத்தினை சமூக வலைதளங்கள் வழியாக பதிவு செய்து வருகின்றனர்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...