தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி அரசு கலை மற்றும் பண்பாடு துறையில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி அரசு கலை மற்றும் பண்பாடு துறையில் 53 நூலகத் தகவல் உதவியாளர் (Library Information Assistant ) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு இன்று இணையத்தில் வெளியானது.

புதுச்சேரி மாநிலத்தில் குடியுரிமை உள்ளவராக இருந்து நூலக தகவல் அறிவியலில் பட்டம் பெற்றவராக இருந்தால் நீங்களும் விண்ணப்பிக்கலாம்.அந்த அறிவிப்பினை பற்றிய குறுந்தகவல் பின்வருமாறு.


பணி  : நூலகத் தகவல் உதவியாளர் (Library Information Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை :53.

ஊதிய விகிதம் : ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,200.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27/01/2016.

காரைக்காலில் மேல் குறிப்பிட்ட தகுதியுடன் யாரேனும் இருந்தால் கண்டிப்பாக விண்ணப்பியுங்கள்.நிறைய இளைஞர்கள் காரைக்காலில் இது என்ன 9,300 ரூபாய் சம்பளமா என்று விட்டு விடுகிறார்கள்.அது சம்பளம் அல்ல ஆறாவது ஊதிய குழுவின் படி உருவாக்கப்பட்ட சம்பள விகிதம்.( அகவிலை படி 119%  ,போக்குவரத்து படி ரூபாய் 3,200 மற்றும் 10% வீட்டு வாடகை படியுடன் சேர்த்து தொடக்கத்திலயே ரூபாய் 34,115 சம்பளமாக பெறுவீர்கள் )
ஏழாவது ஊதியக்குழு வெளியானால் இன்னும் உங்கள் சம்பளம் உயர வாய்ப்பு உள்ளது.அதனால் தகுதியுடைய இளைஞர்கள் விண்ணபிக்க தவறி விடாதீர்கள்.உங்கள் நண்பர்கள் அல்ல உறவினர்கள் இருந்தால் அவர்களிடமும் கூறுங்கள்.மேலும் உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் எங்களின் இணையதளத்தில் தொடர்பு கொண்டால் எங்களால் முடிந்த உதவியை செய்வோம்.

(இது என்ன சென்ற முறை யு.டி.சி க்கு கூடத்தான் 504 போஸ்டுகள் என்று நம்பி வின்னப்பித்தோம்.ஆனால் திட்ட திட்ட புதுச்சேரியிலேயே 450 பேருக்கு வழங்கிவிட்டார்களே.இப்பொழுது இதிலும் 45 முதல் 50 பணியிடம் புதுச்சேரிக்கு தானா பிராந்திய இட ஒதிக்கிடூ என்பது கிடையாதா என்று நீங்கள் கேட்க விரும்புவது எண் காதில் விழுகிறது)

மேலும் தகவல்களுக்கு சொடுக்கவும்

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...