தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி மாநிலத்தில் உண்மையில் மக்களுக்கு தகவல் அறியும் உரிமை உள்ளதா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இது 2004 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்டு பல விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு 2005 ஆம் ஆண்டில் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் இனிதே நிறைவேறியது.இந்தச் சட்டத்தின் படி இந்த நாட்டின் அடிப்படை குடிமகன் ஒருவன்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடம் இருந்து தனக்கு தேவைப்படும் தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.இந்த சட்டம் அரசின் வெளிப்படைத் தன்மை,ஊழல் ஒழிப்பு போன்ற நல்ல அம்சங்களை பறைசாற்றுவதாக உள்ளது.இதனை பயன் படுத்தும் வழிமுறைகள் மிக சுலபமானதாக இருந்தாலும் பெறும்பாலான விண்ணப்பங்கள் பதில் வழங்கப் படாமலயே தள்ளுபடி செய்யப்பட்டு விடுகின்றன இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.எது எப்படியோ நீங்கள் சரியான தகவலை பெற கடுமையாக போராட வேண்டும்.

இந்த சட்டத்திற்காக மத்திய அரசு ஒரு தனி இணைய தளத்தையும் உருவாக்கி வைத்துள்ளது அதன் மூலம் மத்திய அரசை சார்ந்த துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு இணையம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும்.அந்த தளத்தின் முகவரி https://rtionline.gov.in/  இதைப்போன்று அணைத்து மாநில அரசுகளும் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக  எளிதானதாக ஆக்கியுள்ளனர் ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காக ஒரு தனி இணையத்தளம் கிடையாது.இதனால் மக்கள் பயன்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது.அது மட்டுமில்லாமல் இங்கே அரசு நிறுவனங்கள் அளவிற்கு அரசு உதவிப் பெற்று இயங்கும் நிறுவனகள் அதிகமாக உள்ளது அங்கெல்லாம் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளுவதில்லை மற்றும் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும் பொழுது அதற்கான சரியான காரணம் சொல்லப்படுவது இல்லை உண்மையில் புதுச்சேரி மக்களுக்கு தகவல் அறியும் உரிமை உள்ளதா? என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...