தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பொறுப்பு ஏற்க மறுப்பு -மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு

என்னடா இது தலைப்பு த்த்த்தூ என்று கூறுபவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது எனது பொறுப்பு.இப்படி ஒவ்வொருவருக்கும் தனியே பொறுப்புகள் உண்டு.இதில் ஒரு தரப்பினர் தங்கள் பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவித்தால் இன்னொரு தரப்புக்கு கிடைப்பது ஆப்பு.

சில தினங்களுக்கு முண் ஒரு நாளிதழில் நான் படித்த செய்தி "நாட்டில் உள்ள என்பது சதவிகித பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அதற்கான தகுதி இல்லையாம்".இந்தச் செய்தியை படித்தவுடன் எனக்கு தோன்றியது தான் இந்தத்  தலைப்பு.மேற்கூறிய அந்த நாளிதழ் வாக்கியத்திற்குள்  மிகப்பெரிய உண்மைகளை  ஒளிந்து வைத்து  அதை மாணவர்களின் தகுதியைக் கொண்டு மறைக்க முயற்சிக்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றியது.அந்த எண்ணத்தை கேள்விகளாக்கி உங்கள் முன் வைக்கிறேன்.
அந்த என்பது சதவிகித மாணவர்கள் பயின்ற கல்லூரிகளுக்கு பொறியியல் பாடம் பயிற்றுவிக்க தகுதி உள்ளதா?அந்தக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அதற்கான தகுதி உள்ளதா?அனைத்து விதி முறைகளுக்கும் உட்பட்டுதான் இத்தனை கல்லூரிகளுக்கும் அனுமதி வழங்கப் பட்டதா?அந்த மாணவர்களுக்கு பொறியியல் பட்டம் வழங்கிய அந்த பல்கலைகழகங்கள் தகுதியுடையவை தானா?இவை அத்தனை விஷயங்களும் அரங்கேறும் வரையில் அமைதி காத்து இன்று மாணவர்களுக்கு தகுதி இல்லை என்று செய்தி வெளியிடுவதையும் பார்த்து கொண்டு இருக்கும் நாட்டின் தலைமைக்கு தகுதியுள்ளதா?

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிகமான பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி.நாங்கள் தான் அதிகமான பொறியாளர்களை உருவாக்கி வருகிறோம் என்று பெருமையாக கூறிக்கொண்டவர்கள் இன்று வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து விட்ட நிலையில் மாணவர்கள் தகுதி மீது பழியைப் போட்டு பொறுப்பு ஏற்க மறுத்து வருவதையே இது காட்டுகிறது.இப்பொழுது புரிகிறதா ஆப்பு யாருக்கு என்று.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...