காரைக்கால் மாவட்டத்தில் நாம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிறப்பு வாய்ந்த பகுதிகளில் திருமலைராயன் பட்டினமும் ஒன்று.நாம் ஏற்கனவே திருநள்ளார் மற்றும் அதனுடைய சிறப்புகளை இதற்கு முந்தைய பதிவுகளில் பேசி இருக்கிறோம்.திருநள்ளாரின் சிறப்புகளுக்கு சற்றும் சலைக்காதது இந்த திருமலைராயன் பட்டினம்.இது தற்போது காரை மக்களால் சுருக்கமாக திரு.பட்டினம் என்றும் டீ.ஆர்.பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் திருமலைராயன் பட்டினம்
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் நிரவி மற்றும் திருமலைராயன் பட்டினம் இணைந்து ஒரு சட்டமன்ற தொகுதியாக விளங்குகிறது.காரைக்காலில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் நாகூர் ,
நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது.
திருமலைராயன் பட்டினம் ஒரு துறைமுக நகரம்
மிகச்சிறந்த துறைமுக நகரமாக அக்காலத்தில் விளங்கிவந்தது இந்த திருமலைராயன் பட்டினம்.இங்கே உள்ள பகுதிகளில் முத்துக்குளியல் சிறப்பாக செய்யப்பட்டு.உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததாக சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.தென் இந்தியாவின் ஒரு முக்கிய துறைமுகமான காரைக்கால் துறைமுகம் அமைந்துள்ளதும் திருமலைராயன் பட்டினத்தை சார்ந்து உள்ள பகுதியில் தான்.
திருமலைராயன் பட்டினம் பெயர் காரணம்
திருமலைராயனால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியே திருமலைராயன் பட்டினம் என்று அழைக்கப்படுகிறது.இவ்வூரில் ஒரு ஆறு உள்ளது அதன் பெயரும் திருமலைராயன் ஆறு தான்.
திருமலைராயன் என்பவன் யார்?
தஞ்சைப்பகுதியில் குமாரகம்பண்ணனின் ஆட்சி ஏற்பட்டபொழுது.அவனது பிரதிநிதிதியாக திருமலைராயன் (கி.பி 1457 - 1468) என்பவன் காரைக்கால் மற்றும் தஞ்சை பகுதிகளை ஆண்டு வந்தான்.
திருமலைராயன் பட்டினம் பற்றிய மேலும் பல சிறப்புகளை இன்னொரு தருணத்தில் ஒரு புதிய பதிவில் விரிவாக பார்ப்போம்.