தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் தனியார் பேருந்து விபத்து 11 நபர்கள் உயிரிழப்பு என்று தகவல்

விபத்துக்குள்ளான காரைக்கால்  தனியார் பேருந்து
காரைக்காலில் இருந்து நேற்று புறப்பட்டு 38 பயணிகளுடன் திருவணந்தபுரம் சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து திருநெல்வேலி அருகே இன்று காலை விபத்துக்கு உள்ளாகியது.இன்று காலை 5:30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வள்ளியூர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்திருகலாம் என்று கூறப்படுகிறது.

அருகில் இருந்த நீர் தேக்க தொட்டியில் மோதி விடாமல் தடுக்க ஓட்டுனர் பேருந்தை திருப்பிய பொழுது நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.சற்று முன் வாட்சப்பில் கிடைத்த தகவலின்படி 11பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் 20 பயணிகளுக்கு மேல் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...