தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சென்னையில் சுவையான பால்கோவா - ஸ்ரீவில்லிபுத்தூருடன் போட்டிபோடும் சென்னை

பால்கோவா என்றவுடன் உங்களுக்கு ஞாபகம் வரும் நகரம் எது? அதேதான் சரியாக சொன்னீர்கள். நாண் ஸ்ரீவில்லிபுத்தூர் இரு முறை சென்றிருக்கிறேன். கடந்த முறை சென்ற பொழுது ."இங்கு எந்த கடையில் பால்கோவா மிக ருசியாக இருக்கும் என்று ஒரு காவலரிடம் விசாரித்து, அலைந்து திரிந்து சரியான கடையை கண்டுபிடித்து,அது திறக்கும் வரை அங்கேயே  காத்திருந்து,கடை திறந்தவுடன் 10 பொட்டலங்களை வாங்கி அதில் ஒரு பொட்டலத்தை பிரித்து நண்பர்களுடன் இணைந்து சுவைத்திருக்கிறேன்" ஆஹா ........என்ன ஒரு ருசி.அப்படியே காற்றில் நம்மை கரைய வைத்துவிடும் சில நொடிகள் நம்மையே நமக்கு மறக்கடித்துவிடும்.அந்த ருசிக்கு காரணம் என்னவென்று நிறைய பேரிடம் கேட்க ஆரம்பித்தேன்.அதில் ஒருவர் எனக்கு கூரிய பதில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சுத்தமான பசும்பாலில் செய்யப்படுவதாம் ஆனால் மற்ற இடத்தில் எல்லாம் எருமை பாலில் தான் செய்வார்களாம். இது உன்மையானது தானா என்று நான் சோதித்து பார்த்தது கூட கிடையாது.

நான் சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்றிருந்தேன் அங்கே சென்னை விமான நிலையத்தில் இருந்து சில தூரங்கல் கடந்த பிறகு ஒரு ஆவின் பால் கடை பார்த்தேன்.தமிழகத்தில் ஆவின் போல புதுச்சேரியில் பான்லே காரைக்காலில் கோலே போன்ற பால் உற்பத்தி நிறுவனங்களால் நிறைய கடைகள் உண்டு.காரைக்காலில் இருந்தால் கோலேவில் பால் தான் சாப்பிடுவேன்.அதைப் போன்று இதுவும் ருசியாக இருக்கும் என்று நம்பி கடைக்கு சென்றேன்.நான் எதிர்பார்த்தது என்னவோ சுவையான பால்தான் ஆனால் அங்கு இருந்த ஒரு சிறிய பால்கோவா பாக்கெட் வாங்கி உன்ன ஆரம்பித்தேன் ஒரு நிமிடம் சென்னை சாலையின்  வாகனச்சத்தமே என் காதில் விழவில்லை.அப்படயே  நான் மெய்மறந்து போய்விட்டேன்.இனி பால்கோவா என்றவுடன் எனக்கு  சென்னை தான் நினைவுக்கு வரும்.உண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை விட இது ருசியாக தான் இருந்தது.நீங்கள் சென்னைக்கு சென்றாலும் ஆவின் பால்கோவாவை வாங்கி ருசிக்க மறந்து விடாதீர்கள்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...