தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மானியத்துடன் இளைஞர்களுக்கு கடன் -அரசு சொல்வது உண்மைதானா ?

படித்த இளைஞர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற வேலை  வாய்ப்புகள் இல்லை,வேலையில்லா  திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கதறிக் கொண்டு இளைஞர்கள்  விரக்தியில் பதிவு செய்து வருகின்றனர்.இந்த தேசத்தில் உண்மையில் வேலையில்லா திண்டாட்டம் உள்ளதா?.இதைப்பற்றி நாம் பிறகு இன்னொரு இடுக்கையில் விரிவாக விவாதிப்போம்.இப்பொழுது இந்த விஷயத்தில் அரசியில்வாதிகளின் நிலைப்பாடு என்ன என்பது தான் நமது கேள்வி.

நான்  எப்பொழுதும் வானொலியில் நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டே உடற்ப்பயிற்சி செய்வது தான் வழக்கம்.அப்படி ஒரு வழக்கமான தருணத்தில் நான் வானொலிச் செய்திகளை கேட்டுக்கொண்டு இருந்த பொழுதுதான் புதுச்சேரி முதல்வர் வேலையில்லா இளைஞர்களுக்கு ஐம்பது சதவிகித மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதாக செய்தி வாசிக்கப்பட்டது.இது மிகவும் நல்ல விஷயம் இதனால் உண்மையில் வறுமையில் உள்ள பல இளைஞர்கள் பயணடைவார்கள் என்று நினைத்தேன்.அந்த மானியத்துடன் வழங்கப்படும் கடனை பெற என்ன வழிமுறைகள் என்று உண்மையில் தகுதியுடைய 99% சதவிகித இளைஞர்களுக்கு தெரிவதில்லை உண்மை என்னவென்றால் அவர்களுக்கு தெரியப்படுத்துவதும் இல்லை ஏன் தெரியப்படுத்த முயற்சி கூட எடுத்ததில்லை.தெரியப்படுத்திவிட்டால் தன் கட்சிக்கார்களுக்கும்,ஜாதிக் காரர்களுக்கும் எப்படி கடனை வாரி வழங்க முடியும்.உண்மையில் சொல்லப் போனால் மானியம் போக மீதம் உள்ள தொகை வசூலாகப் போவதே இல்லை.கடன் வழங்கும் பொழுதே சரியான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கடன் அழிக்கப்பட்டு இருப்பதற்கும் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது.

இவர்கள் அறிவிக்கும் திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக விளம்பரம் செய்ய செய்கின்ற செலவில் பத்தில் ஒரு மடங்கை அதன் வழிமுறைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சிக்கு செலவிட்டு இருந்தால் பல இளைஞர்கள் பயனடைந்து இருப்பார்கள்.

சிறிது ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திர ஹோட்டல் கட்ட பல கோடி ரூபாய் மானியங்களை பணம் படைத்தவர்களுக்கும்,அரசியல் பிரபலங்களுக்கும் வாரி வழங்கிய புதுச்சேரி அரசு இன்று இளைஞர்களுக்கு மானியம் வழங்க இப்படி யோசிக்கிறது.

நீங்கள் எங்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டாம் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பட்டதாரி இளைஞர் பென்ஷன் என்று அரசே வழங்கிட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் படித்த இளைஞர்களே பதிவிட்டு வருவது நெஞ்சை நெகிழச் செய்து விடுகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...