தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ரூபாய் ஐந்துக்கு 1000 லிட்டர் தண்ணீர்

காரைக்கால் நீர்தேக்கத்தொட்டி
தாகத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் என்ற நிலை மாறுதல்    அடைந்து இன்று இருபது ரூபாய்க்கு ஒரு பாலிதீன் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற ஒரு நிலையை நமது வாழ்வியல் முறையால் அடைந்திருக்கிறோம். ஆனால் இருபது ரூபாய் கொடுத்து நாம் வாங்கும் அந்த நீர் குடிக்க தகுதியானது தானா என்று யாராவது சோதனை செய்து பார்த்து இருக்கிறோமா?.அந்த குடிநீர் பாட்டில்களை சோதித்து அதனுடைய தரம் பற்றிய தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த நம் நாட்டில் தனியாக ஒரு அமைப்பு  இல்லையா?சரி இந்த விஷயத்தை நாம் பேச ஆரம்பித்தால் நாம் பேசிக் கொண்டே இருப்போம் அதனால் நாம் தலைப்புக்கு வந்துவிடுவோம் 1000 லிட்டர் தண்ணீர் வெறும் ஐந்து ரூபாயில்,இது உண்மையில் சாத்தியம் தானா.அது எப்படி 1000 லிட்டர் தண்ணீரை வெறும் ஐந்து ரூபாய்க்கு வழங்க முடியும்? உங்களது கேள்விக்கு பதில் இங்கே,திட்ட திட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணிப்புரிந்த திரு வசந்தகுமார் அவர்கள் தலைமைதாங்கிய ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.அன்று அவர் பேசியது இன்றும் என் நினைவில் உள்ளது.அவர் பேசியது காரைக்காலில் உள்ள நீர் தேக்கத் தொட்டிகள்,குடிநீர் குழாய்கள் மற்றும் குடி நீர் பற்றிய தகவல்கள் தான்.அதாவது 1000 லிட்டர் தண்ணீருக்கு சுமார் ஐந்து பைசா மட்டுமே வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.அந்த வரியை ஐந்து ரூபாயாக மாற்றினால் ஒவ்வொருவர் வீட்டிற்கும் ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கலாம்.அணைத்து நீர் தேக்கத்தொட்டிகளையும் சுகாதாரமானதாகவும், சுத்தமானதாகவும் மாற்றி விடலாம்,குடிநீர் குழாய்களை  சீரமைத்து விடலாம் ஆனால் ஒரு சில அரசியல் காரனங்களுக்காக வரி உயர்வை கொண்டு வர முடியாமல் உள்ளது என்று அவர் கூரினார்.ஒரு மாவட்ட ஆட்சியர்  இப்படி ஒரு விஷயத்தை அதிகம் ஆராயாமல் சொல்லியிருக்க போவதில்லை. திட்டத்தின் சாத்திய கூறுகளை உணர்ந்து தான் அவர் கூறியிருப்பார் என நம்புகிறேன். சிறிது காலத்திற்கு பிறகு அவர் வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.அன்று முதல் காரைக்கால் குடிநீர்,நீர்தேக்கத்தொட்டிகள்,குடிநீர் குழாய்கள் பற்றி யாரும்  எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை.

நேற்று காரைக்கால் தெற்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தனது முகநூல் பக்கத்தில் குடிநீர் குழாய்கள் பற்றி செய்தி வெளியிட்டு இருந்ததைப் பார்த்தேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அதன்படி முதற்கட்டமாக CENTRAL ZONE என்று பிரித்து புளியங்கொட்டை சாலை முதல் மதகடி வரையில் உள்ள அனைத்து குடிநீர் குழாய்களை புதிதாக மாற்றுவதற்கும்,அந்தப் பகுதிக்காக மட்டும் குடிநீர் விநியோகம் செய்ய 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தேக்கத் தொட்டியினை ராஜாத்தி நகர் பகுதியில் அமைப்பதற்கு HUDCO மூலம் கடன் பெற ஏறத்தாழ 50 கோடி ரூபாய்க்கான அரசின் நிர்வாக ஒப்புதலை துணைநிலை ஆளுநர் அவர்கள் தந்துள்ளதாகவும்.இந்த ஆண்டே பணிகள் துவங்கும் என்று நம்புவதாகவும் செய்தி வெளியிட்டு இருந்தார்.இது காரைக்கால் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி தான்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...