தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி பாஸ் போர்ட் சேவா கேந்திரா தொடங்கும் தேதி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 4 மாவட்டங்கள் உள்ளன அவை புதுச்சேரி,காரைக்கால்,மாஹி மற்றும் ஏனாம்.இதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் தமிழக மாநிலத்திற்கு இடையே அமைந்துள்ளது.புதுச்சேரி மாநில மக்கள் புதிய பாஸ் போர்ட் எடுக்க மற்றும் பழைய பாஸ் போர்ட் மறு பதிப்பு செய்ய சென்னை சென்று வர வேண்டிய நிலை இருந்து வந்தது.அதனை போக்கும் வகையிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் கால்நடை வளர்ப்பு வளாகம்,மறைமலை அடிகள் சாலை,புதுச்சேரி -605001 (Animal Husbandry Campus ,Maraimalai Adigal Salai ,Puducherry -605 001) என்ற முகவரியில் பாஸ் போர்ட் சேவா கேந்திரா (Mini Passport Seva Kendra ) இந்த மாதம் 22ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் வருகின்ற 22 பிப்ரவரி 2016 ஆம் ஆண்டு தொடங்க உள்ள புதுச்சேரி Passport Seva Kendraவில் விரைவாக பாஸ்போர்ட் பெற உதவும் தத்கல் (Thatkal ) முறையில் விண்ணபிக்கும்  வசதி இல்லை.தத்கலில் பதிவு செய்ய சென்னை தான் செல்ல வேண்டும்.புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் மறு பதிப்பு உள்ளிட்டவைகளுக்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 19ஆம் தேதியில் இருந்து பெறப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...