தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பாரத பிரதமர் நாளை தமிழகம் வருகை

நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை தமிழகம் வர உள்ளாராம்.நாளை கோவையில் ஒரு கல்லூரியை திறந்து வைப்பதற்காகவும்,
 கொடிசியா மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டதில் பேசுவதற்காகவும் அவர் நாளை வருகை புரிய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேதமர் மோடி வருகையை,அடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன.சுமார் 6000 போலீசார்கள் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் திறந்து வைக்கவிருக்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியா மைதானம் உள்ளிட்ட இடங்கள் போலிசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தமிழக அரசியலாளர்களை  பொறுத்த வரையில் மோடியின் வருகை என்பது ஒரு கூட்டனி அமைவதற்கான வாய்ப்பு.என்னை போன்றவர்களின் எதிர்பார்ப்பு அவர் நாளை பொதுக் கூட்டதில் எந்த மொழியில் பேசுவார்  இந்தியில் பேசுவாரா? அல்லது ஆங்கிலத்தில் பேசுவாரா? அல்லது தமிழில் வணக்கம் ,நன்றி போன்ற வார்த்தைகளையாவது கூறுவாரா? என்பது தான்.முன்பு இருந்த நிலைப் பாட்டில் பிரதமர் நீடிப்பதாக எனக்கு தோணவில்லை.பல விஷயங்களில் தன்னுடைய நிலையை அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.இந்த மொழி விஷயத்திலும் மாறி இருப்பார் என்றே நினைக்கிறேன்.அதுவும் குறிப்பாக சிங்கப்பூர் பிரதமருடன் இணைந்து அங்கிருந்த தமிழ் உணவகத்தில் வடை சாப்பிட்டுவிட்டு  வந்ததில் இருந்தே அவருக்குள் பல மாற்றங்கள் தெரிகின்றன.

அந்த பொதுகூட்டதில் மோடி அவர்களின் உரையாடலுக்கு பிறகு நாம்  மீண்டும் மற்றொரு இடுக்கையின் வாயிலாக செய்தியை பகிர்வோம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...