தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

அலிபாபாவும் விஜய் மல்லையாவும்

இன்று ஊடங்களால் அலசி ஆராயப்பட்டு கொண்டிருக்கும் விஷயம் விஜய் மல்லையா வங்கிகளில் பெற்று திருப்பி கொடுக்காத 9000 கோடி ரூபாய் கடன்.இவர்கள் அலசும் விதத்தைப் பார்த்தால் பணம் திரும்பி வருவது மிகவும் கடினம் என தெரிகிறது.இதில் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார் என ஒரு செய்தி தொலைகாட்சியில் ப்ளாஷ் ஆகிக்கொண்டு இருக்கிறது.விவாதத்தில் கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளின் தலை உருட்டப்படுகிறது.இதற்கு வங்கி அதிகாரிகளை மட்டும் குறை கூரினால் போதுமா.

எனக்கென்னவோ அலி பாபாவும் நாற்பது திருடர்களும் என்ற திரைப்படத்தின் தலைப்பு தான் நினைவுக்கு வருகிறது.அந்த திரைப்படத்தில் வரும் குகைப்போலே வங்கிகள் தங்களின் சட்ட திட்டங்களால்  மூடப்பட்டு கிடக்கும்.சாமானிய மக்கள் அதனுள் நுழைய கடன் பெற நிறைய தகவல்களை கொடுக்க வேண்டியது இருக்கும்.இருந்தும் அழைக்கலைக்கப் படுவார்கள்.அதே சமயம் மல்லையா போன்ற பணக்காரன் பகட்டோடு வந்து ஒரு மந்திரத்தை சொன்னால் வங்கி கதவுகள் தானாக திறக்கப்படும்.வேண்டிய அனைத்தையும் செய்து தருவார்கள்.அவர் ஒரு இங்கிலாந்து குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் கேட்ட கடனை அள்ளி வழங்குவார்கள்.

நான் இங்கு விஜய் மல்லையாவை அலிபாபாவுடன் ஒப்பிட்டு இருக்கிறேன்.அலிபாபா  ஏழைகளுக்கு உதவி செய்தான் மல்லையா ஊதாரி பிள்ளைக்கு சேர்த்து வைத்திருக்கிறான்.நன்றாக யோசித்துப் பாருங்கள் வழக்கு இவர்  மீது மட்டும் தான் பதிவு செய்யப்பட்டு உள்ளது.பணம் அனைத்தையும் பிரித்து பல நபர்களிடம் கொடுத்து  வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பான்.சரி தேர்தல் நேரத்தில் இந்த செய்தியை வைத்து எதை திசை திருப்ப போகிறார்கள் என்று தெரியவில்லை.

விஜய் மல்லையா ஒரு தொடக்கம் தான். வங்கிகளில் பல கோடிகள் கடன் பெற்று அரசியல் செல்வாக்கால் திருப்பி கட்டாம்மல் இருக்கும் பல திருடர்கள் வெளியே தான் இருக்கிறார்கள் அவர்கள்தான் அந்த 40 திருடர்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைவில் வெளி வருவார்கள் என நம்புகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...