தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் வாகன சோதனையில் தகுந்த ஆவணங்கள் இல்லாத பணம் பிடிபட்டது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில எல்லைகளில் சோதனை அதிகப்படுத்தப் பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநில எல்லையில் சரியான ஆவணங்கள் இல்லாத பல பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததாக செய்தி வெளிவந்தது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மற்றும் ஒரு மாவட்டமான காரைக்காலில் நேற்று காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பொழுது காரைக்கால் மதகடி அம்பாசமுத்ரம் அருகே மகிழுந்து ஒன்றில் (காரில் ) இருந்து சரியான ஆவணங்கள் இல்லாத 2.74 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் நாகப்பட்டினத்தை சேர்ந்த அந்த மகிழுந்து ஓட்டுனரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆவணங்கள் இல்லாத பணம் அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு முறையும் தேர்தலில் அரசியல் கட்சிகளின் பணம் விளையாடுகிறது.ஒருவேளை அந்த பணம் எல்லாம் ஆவணங்களோடு கொண்டுவரப் பட்டிருக்குமோ.





நமக்கு ஏம்பா வம்பு ...............

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...