தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி சட்ட மன்ற தேர்தல் 2016 - 84.11 சதவிகித வாக்குகள் பதிவானது

கொட்டித் தீர்த்த மழையிலும் நேற்று புதுச்சேரி மாநில சட்ட மன்ற தேர்தல் வாக்கு பதிவு இனிதே நிறைவடைந்தது.30 சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரி சட்டமன்றத்தில் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 5 சட்டமன்ற உறுப்பினர்களும்,மாஹியில் இருந்து 2 சட்ட மன்ற உருபினர்களும் மற்றும் ஏனாமில் இருந்து 1 உறுப்பினரும் தேர்ந்தெடுக்க படுவர்.இம்முறை ஒன்பது லட்சத்து நாற்பத்து ஓராயிரத்து தொலாயிரத்தி மும்பத்தி ஐந்து (9,41,935) வாக்காளர்களைக் கொண்டுள்ளதால் வாக்களிப்பதர்கென தொளாயிரத்து நாற்பது பூத்துகள் உருவாக்கப்பட்டு இருந்தன.சட்டமன்றத்தில் உள்ள 30 இடங்களுக்காக புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 344 வேட்பாளர்கள் கலமிரங்கி யிருந்தனர்.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரை 80.98 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.மிக அதிகமாக திருநள்ளாறு தொகுதியில் 84.03 சதவிகிமும் குறைந்த பட்சமாக காரைக்கால் தெற்கு தொகுதியில் 75.1 சதவிகிமும்பதிவாகியுள்ளது.

சமீப காலங்களில் ஏன் நான் வாக்களிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தேர்தல் வாக்கு பதிவு நடைபெறும் பொழுது கடுமையான மழை பெய்து பார்த்ததில்லை.அந்த வகையில் மட்டுமே இது ஒரு மற்றவைகளை விட இதை மாறுபட்ட தேர்தலாக உணர்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...