தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சமூக ஊடகங்களில் வேறு வடிவில் தொடரும் தேர்தல் பிரச்சாரங்கள்

அப்பாடா நிம்மதி தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் முடிந்து விட்டன இனியாவது தொலைக்காட்சி செய்தி ஊடகங்களில் வேறு ஏதாவது உலகின் முக்கிய செய்திகளை ஒளிபரப்பு செய்வார்கள் அதை பார்க்கலாம் என்று நினைத்திருந்தால்.நேற்று மாலை 6.00 மணிக்கு மேல் தொலைக்காட்சியில் செய்தி  ஒளிபரப்பும் ஒரு சில ஊடகங்களில் அவைகள் சார்ந்து இருக்கும் கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் செய்த சாதனைகள் என்னவென்று ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.சரி என இன்னொரு தொலைக்காட்சி சேனலை மாற்றினால் அங்கே தமிழகத்தின் முக்கிய ஒரு பிரச்சனைக்காக அவர்கள் தலைவர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை அறிக்கையாக படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இன்னொரு சேனலில் இவர்கள் உத்தமர்களைப் போல பிடிப்பட்ட பணம் எல்லாம் எதிர்க்கட்சியுடையது என்று செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.ஊடகத்தின் வாயிலாக அவர்கள் தலைவரின் சாதனையை எடுத்துக் கூறுவது பிரச்சாரம் என்று ஆகாதா.முக்கால் வாசி ஊடகங்கள் அவைகள் சார்ந்து இருக்கும் கட்சியின் தலைவர்களைப் பற்றிய செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றன இவைகள் எல்லாம் தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டவை தானா? ஏதோ  ஆறுதலுக்கு ஒரு சில தொலைக்காட்சி ஊடகங்களில் மட்டும் 100% வாக்கு பதிவு சத்தியமா என்பது போன்ற விவாதங்களை ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர்.

சரி,இந்த தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு சமூக வலைத்தலங்களில் ஒன்றான முகநூலிக்கு சென்று  பார்த்தால் நிலைமை இன்னும் மோசம்.இந்தக் கட்சிக்கா வாக்களிக்க போகிறீர்கள் வேண்டாம் என்று ஒரு பதிவும் .ஒருக்கட்சியை விமர்சித்து இன்னொரு பதிவும்.சில மணி நேரங்களுக்கு முன்னாள் கட்சியின் சின்னத்துடன் இந்தக் கட்சிக்கே வாக்களியுங்கள் என்று மற்றொரு பதிவும்.எனது FACEBOOK WALL என்று சொல்லகூடிய முன் பக்க சுவற்றில் இந்த செய்திகள் எல்லாம் தோன்றுகிறது.இவைகளெல்லாம் சட்டங்களுக்குள் வராதோ என்ற கேள்வி என்னையும் சேர்த்து பல லட்சம் மக்கள் மனதிலும்  எளும்பியுள்ளதாகவே  கருதுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...