தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தேர்தல் கருத்து கணிப்பு 2016 ஊடகங்கள் நடத்தும் நாடகமா

தேர்தல் நெருங்கும் தேதிகளில் தேவையற்ற கருத்து கணிப்புளை தவிர்க்க வேண்டும் என்று ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையர் முன்பே கூரியிருந்தார்.அது எல்லாம் எங்களை கிடையாது என்பது போல தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் யாவும் கருத்துக்கணிப்புகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன.சரி அந்த கருத்து கணிப்பு முடிவிலாவது ஒரு ஒற்றுமை இருக்கும் என்று பார்த்தல் அதுவும் இல்லை.ஒரு தொலைக்காட்சி சேனலில்  ஆளும் கட்சி வெற்றிபெறும் என்றும்.மற்றொன்று திராவிட கட்சி வெற்றி பெரும் என்றும்.வேறொரு தொலைகாட்சி சேனலில் இந்த இரு திராவிட கட்சிகளும்  இல்லாது  மூன்றவதாக ஒரு கட்சி வெற்றி பெரும் என்றும் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.அது எப்படி ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல் களுக்கும் வெவ்வேறு முடிவுகள் கிடைத்துள்ளன.இதற்கு காரணம் கருத்துக்கேட்கும் இடமும்,விதமும் தான்.இவர்கள் யாவரும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 100 அல்லது 1000 பேர் களிடம் கருத்து கேட்டிருப்பார்கள் .கருத்துக்கேட்ட இடம் ஒரு பொது இடமாக இருக்கும் பேருந்து நிலையம் ,கல்லூரி வளாகம் அதைப்போன்று இன்னும் பிற இடங்கள்.இதில் தான் பிரச்சனையே உள்ளது ஒரு பொது இடத்தில் 100 பேரிடம் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டு திட்ட திட்ட 3,00,000 வாக்குகள் கொண்ட ஒரு தொகுதியில் மீதம் உள்ள மக்களும் இப்படித்தான் வாக்களிப்பார்கள் என்று கணிப்பது மிகவும் தவறு.ஒரு தொகுதியில் உள்ள ஒவ்வோரு தெருவுக்கும் சென்று அங்கிருக்கும் 20 வீடுகளில் கருத்துக்கேட்டு கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருந்தால் ஓரளவாவது ஒத்துப்போகும்.
இவர்களின் கருத்துக்கணிப்பு முறை தவறு என்பது இவர்களுக்கே தெரிந்து இருக்கும்.தெரிந்தும் வெளியிடுவதின் காரணம் மக்கள் மனதை மாற்றத்தான்.புரியவில்லையா,இந்த தேர்தலில் இவர் தான் வெற்றி பெற போகிறார் என்ற ஒரு மாயையை மக்கள் மனதில் ஆழமாக பதிவு செய்ய தான் .இதனால் இவர்களுக்கு என்ன லாபம் என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை.என்னையும் சேர்த்து நாம் அனைவரும் அவர்களிடம் தான் இந்தக்  கேள்வியை கேட்க வேண்டும்.பதில் அவர்களுக்கு மட்டுமே  வெளிச்சம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...