தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

குப்பைகளால் நாசமாகும் சுற்றுலாத் தளங்கள்

இன்று நாம் முகம் சுழித்து,மூக்கை மூடிக்கொண்டு கடந்து செல்லும் இடங்கள் எல்லாம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நல்ல இயற்கை வளம் கொண்ட தென்றல் வீசுகின்ற சோலையாகத்  தான் இருந்திருக்கும்.இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் அழிவுகளைக் காட்டிலும் மனிதனால் ஏற்படுத்தக்கூடிய பேரழிவுகள் மிக அதிகமாகிக் கொண்டு இருக்கிறது என்று ஒரு அந்நிய நிறுவனம் தனது கணக்கேடுப்பில் தெரிவித்துள்ளது.இப்படி மனிதன் தன் சுய நலத்துக்காகவும், ஒரு சில நிமிட இன்பங்களுக்காகவும் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அவர்களின் அழிவுக்கு மட்டுமின்றி அவர்கள் சந்ததிகளின் அழிவுக்கும் வழி வகுக்கிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பல சமூக ஆர்வலர்கள் முயன்றாலும்,திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று ஒரு பழைய திரைப்பட பாடலில் வரும் வரிகளுக்கு ஏற்ப மக்களுக்காய் தோன்றும் வரையில் எதுவும் சாத்தியமற்றதாக ஆகிவிடுகிறது.இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவும்,போதிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல அரசு கடமைப் பட்டுள்ளது.ஆனால் அப்படி ஒன்று நடந்ததாக இதுவரையில் தெரியவில்லை.

இயற்கைக்கு எதிரான செயல்கள் அனைத்து ஊர்களிலும்,நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் மிக சாதாரணமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.இதனால் பல வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தளங்கள் கூட கழிவுகளால் சூழப்பட்டு அதன் சிறப்பு குன்றும் நிலை ஏற்பட்டுவிடுகிறது . அனைத்து இடங்களுக்கும் நம்மால் சென்று அங்கு இருக்கும் நிலையை பதிவு செய்ய முடியாது குறைந்த பட்சம் நமக்கு அருகில் இருக்கும் இடத்தின் நிலையையாவது பதிவு செய்யாலாம். உதாரணமாக காரைக்கால் கடற்கரை,இந்தியாவின் உள்ள மிக அழகிய கடற்கரைகளில் இதுவும் ஒன்று.காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள திருநள்ளார்,கும்பகோணம், மாயாவரம், திருமலைராயன் பட்டினம் ,நாகூர்,தரங்கம்பாடி  போன்ற சுற்றுலா தளங்களுக்கு வருகைத்தரும் பயணிகள் பொதுவாக மாலை நேரத்தில் காரைக்கால் கடற்கரைக்கு வந்து இளைப்பாறி செல்லவே விரும்புகின்றனர்.மின் விளக்குகளால் ஒளிர்  அழகிய சாலைகள்,சதுப்பு நிலக்காடுகள்,பூங்கா என இளைப்பாற வரும் சுற்றுலா பயணிகளை கவரும் காரைக்கால் கடற்கரை பகல் வேளையில் குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது.அந்த காட்சி புகைப்பட வடிவில் கீழே பதிவு  செய்யப்படுகிறது.

உங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் இப்படிப்பட்ட சூழல் நிலவுமானால் தாராளமாக இங்கே பதிவு செய்யுங்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...