ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அரங்கேறும் சட்ட மன்ற தேர்தல் நெருங்கிவிட்டால் தலைவர்களின் பிரசாரங்களில் விறுவிறுப்புக்கும் , கலகலப்புக்கும் பஞ்சமிருக்காது.இந்த முறை 2016 சட்ட மன்ற தேர்தல் இதற்கு முந்தய தேர்தல்களில் இருந்து மாறுபட்டு சுவாரசியம் இன்றி உள்ளது.நான் சிறுவனாக இருந்த பொழுது காரைக்கால் தெரு வீதிகளில் தேர்தல் தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்தே பேரணிகள் பல நடத்தி கூட்டம் கூட்டமாக வாக்கு சேகரிக்க வருவார்கள் ஆனால் மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வீட்டுக்கு வந்து ஓட்டு சேகரிக்கும் கூட்டம் மிக குறைவாகவே உள்ளது.ஒருவேளை சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் கூட இந்த நிலை உருவாகியிருக்கலாம்.எது எப்படியோ இதனால் மக்களுக்கு பயன் இருந்தால் சரி.