தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஏற்றிவிட வருகிறது ஏழாவது ஊதியக்குழு -ஏ வருது வருது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை மகிழ்விக்க வந்து கொண்டு இருக்கிறது ஏழாவது ஊதியக்குழு.இது 5ஆவது மற்றும் 6வது ஊதியக்குழுப்போல் பெரிய அளவில் சுமார்  இரண்டு  மடங்கு சம்பளத்தை உயர்த்துமா என்று பார்த்தால்.அப்படி இல்லை என்பது போல் தான் தோன்றுகிறது .சரி அப்பொழுது இந்த ஏழாவது ஊதியக்குழுவால் என்ன  தான் லாபம்? என்று கேட்கிறீர்களா.உங்களுக்கு கண்டிப்பாக லாபம்  தரக்கூடியதாக இருக்கலாம் அதாவது சராசரியாக இப்பொழுது வாங்கும் சம்பளத்துடன் குறைந்த பட்சம் 23.5% சதவிகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

அமைச்சரவை செயலாளர் திரு.P.K.சின்ஹா தலைமையிலான செயலாளர்கள் குழு தனது  ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்து விட்டது.ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி குறைந்த பட்ச ஊதியமாக இந்திய ரூபாய் சுமார் 23,500 ஆகவும் அதிகபட்ச ஊதியமாக ரூபாய் 3,25,000 ஆகவும் நிர்ணயிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த ஏழாவது ஊதியக்குழு ஏற்றி விட போவது அரசு ஊழியர்களின் சம்பளத்தை மட்டுமல்ல விலை வாசியையும் தான்.தனியார் துறையில் குறைந்த பட்ச ஊதியம் வாங்கும் ஊழியர்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.

மேலும் ஏழாவது ஊதியக்குழுவின் மாற்றங்களை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...