தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஊடகங்களுக்கு தீனி போடும் புதுவை மாநில அமைச்சர்களின் அதிரடி நடவடிக்கைகள்

கடந்த சில நாட்களாக  புதுவை மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள் தங்களின் கீழ் உள்ள துறைகளில் அதிரடி ஆய்வுகள் நடத்துவதும்.அதனை ஊடகங்கங்கள் செய்தியாக வெளியிடுவது தொடர் கதையாகி விட்டது.இந்த கதையின் தொடக்கமானது  மரியாதைக்குரிய கிரண் பேடி அவர்கள் புதுவை மாநிலத்தின் ஆளுநராக பதவிப்பிரமானாம் செய்து கொண்ட நேரத்தில் இருந்தே ஆரம்பமாகிவிட்டது.பின்னர் சில தினங்களுக்கு பிறகு ஆளுநர் கிரண்பேடி தனது உரையில் உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு கீழ் இயங்கிவரும் துறைகளில் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.அந்த அறிவுறுத்தலின் படி முதல்வர் உட்பட அணைத்து அமைச்சர்கள் மற்றும் அந்தந்த துறை சார்ந்த உயர் அதிகாரிகள்  அரசு நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.நேற்றைய தினம் கூட காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஒரு பள்ளியில் சென்று மாணவர்களுடன் உரையாடல் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்து உணவுகளை தானும் சுவைத்து ஆய்வு மேற்கொண்டதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த அதிரடி ஆய்வுகள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று வெளியே சென்று கருத்து கேட்க எண்ணினோம்.அதன் விளைவை கீழே கான்போம் .அனைத்து கருத்துக்களையும் இங்கே பதிவு செய்ய அதிக நேரம் பிடிக்கும் என்பதால் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பகிர்கிறேன்.

கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்த ஒருவர்.

நான் கேட்ட கேள்வி : முதல்வர்,அமைச்சர்கள்  மற்றும் உயர் அதிகாரிகள் அரசு நிறுவனங்களில் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்களே அதைப்பற்றி உங்கள் கருத்து ?
அவர் சொன்ன பதில் : இதனை ஆய்வு என்று வேண்டுமானால் கூறலாம்.அதிரடி ஆய்வாகாது.எதற்காக ஆய்வு வேலைகள் ஒழுங்காகா நடக்கத்தானே இந்த ஆய்வினால்  அவர்களை நேர்மையாக பணி  செய்ய கட்டாயப்படுத்த முடியவில்லையே.

இன்னும் சிலரிடம் கேட்டேன் அவர்களில் பல பேர்களுக்கு இந்த அதிரடி நடவடிக்கைகள் பற்றி ஒன்றுமே  தெரியவில்லை என்பது தெரியவந்தது .இன்னும் சில பேர் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.

சிலர் இது மிகவும் நல்ல முயற்சி என்று பாராட்டி விட்டு சென்றனர்.

 ஒரு சிலர் விளம்பரம் தேடிக்கொள்வதற்காக செய்த செயலாக கூட இருக்கலாம் ஆனால் எல்லோரும் அதற்காக மட்டும் தான் செய்தார்கள் என்று கூறிவிட முடியாது.

சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.நான் ஒரு மூன்று நாட்களுக்கு முன்னர் கடற்கரை சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்த பொழுது நடுவே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டியதிருந்தது  தண்டவாளத்தில் நடந்து சென்றுக்கொண்டு இருந்ததேன்  அப்பொழுது ரயிலில் இருந்து வரும் எச்சரிப்பு ஒலிப்போல் ஒரு சத்தம் கேட்டது பக்கவாட்டில் திரும்பி பார்த்து அதிர்ந்து போனேன் என்னை நோக்கி ரயில் வந்துக்கொண்டு இருந்தது ஆனால் கேட் மூடப்படவில்லை. இரு சக்கர வாகனங்களில் இருந்து கனரக வாகனங்கள் வரை யாரும் நிறுத்தி நிதானமாக செல்வதாக தெரியவில்லை.ஒருவேளை  உயர் அதிகாரிகள் அதிரடி ஆய்வுகள் மேற் கொள்வார்கள் என்கின்ற பயம் ரயில்வே ஊழியர்களுக்கு இல்லையோ ! என்னவோ ?

 இதைப்போன்ற அதிரடி ஆய்வுகள் அணைத்து துறைகளிலும் தொடர வேண்டும்.இத்திட்டத்தை பல்வேறு இடங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும் .ஆனால் இந்த ஆய்வுகளுக்கான பலனை மக்கள் அடைய வேண்டும்.அப்பொழுது தான் இந்த ஆய்வுகளுக்கெல்லாம் ஒரு அர்த்தம் பிறக்கும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...