தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சென்னையில் சித்த மருத்துவ பாரம்பரிய திருவிழா

சில ஆண்டுகளுக்கு முன்னர் பக்க விளைவுகள் அதிகம் உடனடி தீர்வு இல்லை என்றெல்லாம் காரணங்கள் கூறி மக்களிடம் இருந்து ஒரு சிலரால் ஒதுக்கி வைக்கப்பட்ட நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு தற்போது மக்களிடத்தில் வரவேற்பு கூடிவருகிறது.அலோபதி என்று சொல்லக்கூடிய ஆங்கில மருத்துவத்தால் கண்டு பிடித்து நிரந்தர தீர்வு வழங்க முடியாத பல வகையான நோய்களை சித்த மருத்துவத்தால் கண்டறியவும் குணப்படுத்தவும் முடியும் என்ற நம்பிக்கை இன்றைய இளைய தலைமுறையினரிடம்  அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப் படுகிறது.
 இந்நிலையில் சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜீ.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் உலக சித்தா அறக்கட்டளையுடன் இணைந்து உலக சித்த மருத்துவ பாரம்பரிய திருவிழா வருகின்ற மாதம் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் கொண்டாடப் பட உள்ளது.

இந்த சித்த மருத்துவ திருவிழாவில் இயற்கை விவசாயம்,விதைகள் மற்றும் வீட்டில் இயற்கையான உரங்கள் கொண்டு தோட்டங்கள் அமைப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...