தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கிரண்பேடி வருகையால் ஒளிரும் காரைக்கால்

புதுவை மாநில துணை நிலை ஆளுநராக கிரண்பேடி அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் புதுச்சேரியில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.புதுவை மாநிலத்தின் மற்றொரு முக்கிய மாவட்டமான காரைக்காலுக்கு ஒருமுறை கூட வருகை தரவில்லை இங்கேயும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று காரைக்காலின் பல்வேறு தரப்பு  மக்களும்  தங்களுடைய ஆதங்கங்களை சமூக ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வந்தனர் . இந்நிலையில் இன்று (18/08/2016) காலை காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார் மேதகு துணை நிலை ஆளுநர்.இவருடைய வருகை பற்றிய தகவலை முன்பே அறிந்திருந்ததால் நேற்றே (17/08/2016)  காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக முக்கிய சாலைகளின் ஓரமாக கொட்டிக்கிடந்த குப்பைகள் யாவும் சரி செய்யப் பட்டு விட்டன.இன்று காரைக்கால் கடற்கரை முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் தூய்மையாக இருப்பதை உணர முடிவதாக பொது மக்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே இன்று 18/09/2016 (வியாழக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களை மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்.நாளை 19/08/2016 (வெள்ளிக்கிழமையும் ) மக்களை நேரில் சந்திக்க உள்ளார்.துணை நிலை ஆளுநரை சந்திக்க விரும்புவோர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணிக்குள் முன் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் காரைக்கால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாரத்திற்கு ஒருமுறையாவது  மேதகு ஆளுநர் அவர்கள் காரைக்காலுக்கு ரகசியமாக வருகை புரிந்து அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...