தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மதுக்கடையாக மாறிவரும் காரைக்கால் கடற்கரை

தமிழகம்  மற்றும் புதுச்சேரி மாநில நகரங்களின் வழியாக பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் இங்கே மதுக்கடை எங்கே உள்ளது என்று கேட்டு விசாரித்து மது அருந்தி செல்வது வாடிக்கையான ஒன்று.ஆனால்,உள்ளூரில் உள்ள மக்கள் சிலரிடம் கேட்டால் எவண்டா மதுக்கடைக்கு சென்று மது அருந்துவது என்று கூறுவார்கள்.ஆம் பொது இடங்களில் மது அருந்தவே நிறைய பேர் விரும்புகிறார்கள்.இது  அணைத்து நகரங்களிலும் நடக்கின்ற ஒன்று தான் என்றாலும்.மக்கள் கூடுகின்ற பொது இடங்கள்,சாலைகளின் ஓரங்கள்,நடைபாதைகள் போன்றவற்றில் இது முற்றிலும் தவிர்க்க பட வேண்டும். காவல் துறை இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

வெறும் கருத்து மட்டும் சொன்னால் போதாது ஆதாரமும் வேண்டுமல்லவா.அதற்காக காரைக்கால் கடற்கரையின் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ள டாக்டர்.விக்ரம் சாராபாய் சாலையை எடுத்துக்கொள்வோம்.மாலை மற்றும் காலை நேரங்களில் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அணைத்து தரப்பினரும் இங்கே தான் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.சமீப காலமாக குறிப்பாக மாலை நேரங்களில் இந்த சாலையின் இரு புறங்களிலும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அறுந்துகின்றனர்.அந்த இடமே இருள் சூழ்ந்து சமூக விரோதிகள் நடமாடும் பகுதிகள் போல் காட்சியளிக்கிறது.மக்களின் பயன் பாட்டிற்காக பல கோடி செலவு செய்து உருவாக்கியதாக கூறப்படும் இந்த சாலையில் பெண்கள் மாலை நேரங்களில் செல்வதற்கே பயந்து நடுங்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.நாம் அங்கு சென்று பார்த்த பொழுதும் அது உண்மை என்பது போலவே இருந்தது.

சாலைகளின் இரு புறங்களிலும் மது பாட்டில்கள்,தண்ணீர் பொட்டலங்கள்,பிளாஸ்டிக் பைகள் என ஒரே குப்பை மையமாக  காட்சியளிக்கிறது.காரைக்கால் கடற்கரையின் அழகிய சதுப்பு நில காடுகள் குப்பை காடுகளாக மாறி வருகின்றன.இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பதே அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்களின் கருத்தாக உள்ளது.

இதோ காரைக்கால் டாக்டர் விக்ரம் சாராபாய் சாலையின் ஓரத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த புகைப்பட காட்சி இங்கே இணைக்கப்படுகிறது.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...