தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கிரண்பேடி vs நாராயணசாமி புதுச்சேரியில் மோதல் ஆரம்பம்

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய பிறகு யார் அடுத்த முதலமைச்சர் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் அரங்கேறிய கடும் போட்டியில் தேர்தலிலேயே போட்டியிடாமல் இடையில் நாற்காலியை தட்டி பறித்து முதலமைச்சராக அதில் அமர்ந்தவர் முன்னால் மத்திய அமைச்சர் நாராயணசாமி. அவர் புதுச்சேரியின் அடுத்த முதல்வர் என்று அறிவிக்கப்பட்ட நாளிலேயே தொலைக்காட்சி நிருபர் ஒருவர் "புதுவையின் ஆளுநராக பொறுப்பேற்று இருப்பவர் கிரண்பேடி அவர் வேறு கட்சியை சேர்ந்தவர் நீங்கள் காங்கிரஸை சேர்ந்தவர் இதனால் உங்களுக்குள் ....? "என்ற கேள்வியை கேட்டு நாராயணசாமியின் வாயைகிளற நினைத்தார்.ஆனால் அதற்கு மிகவும் நிதானமாக  "அதெல்லாம் தவறு புதுச்சேரியின் வளர்ச்சியில் ஆளுநருக்கும் அக்கறை உள்ளது எங்களுக்கும் அக்கறை உள்ளது " என்று சூசகமான பதிலை கூறி சென்றுவிட்டார்.

பின்னர் அமைச்சரவை உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு புதுச்சேரியில் குப்பைகளும் கழிவுகளும் அதிகமாக உள்ள இடங்களுக்கு  நேரில் சென்று  பார்வையிட்ட ஆளுநர் கிரண்பேடி ஊழியர்களையும் அதிகாரிகளையும் நேரில் அந்த இடங்களுக்கே அழைத்து பேசி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.இந்நிலையில் ஆளுனருடன் நடந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்துக்கு பிறகு ஊடங்ககளுக்கு அளித்த பேட்டியில் திரு.நாராயணசாமி அவர்கள் "  புதுச்சேரி டில்லியைப்போல் கிடையாது இங்கு அரசு ஊழியர்கள் விவகாரம்,பணிநியமனம் உள்ளிட்ட விஷயங்களில் முடிவெடுக்க தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது.அதனால் இந்த விஷயங்களில் நாங்கள் கூறுவதை ஆளுநர் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.இந்த பதில் தான் பார்வையாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஒரு  கேள்வியை எழுப்பியது எது என்னவென்றால் "அப்பொழுது அரசு ஊழியர்கள்,அரசு பணி நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் தான் கருத்து வேறுபாடா ?".இந்த இடத்தில் தான் அதிகாரிகள் உள்ளே வருகிறார்கள்.ஆளுநர் கிரண்பேடி எடுத்துவரும் சில அதிரடி நடவடிக்கைகள் பல அரசு உயர் அதிகாரிகளுக்கு தலை வழியாகவே இருந்திருக்கிறது போல.ஒரு வேலை முதலமைச்சர் அளித்த பேட்டிக்கு முக்கிய காரணமாக கூட இது இருந்திருக்கலாம்.

பின்னர்,சில தினங்களுக்கு முன் புதுச்சேரி மராத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும்  நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு இருந்தார் ஆளுநர் கிரண்பேடி.நிகழ்ச்சிக்கு வந்த கிரண்பேடி பரிசுகளை வழங்குவதற்கு முன்பே "குப்பைகளை சுத்தம் செய்ய நினைக்கும் பொழுது அதிகாரிகள் தக்க ஆதரவை தருவதில்லை குப்பைகளை சுத்தம் செய்வது துணை நிலை ஆளுநரினால் வேலை அல்ல  அது மக்கள் ,மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்  மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் கடமையாகும் .மக்கள் இதற்கு ஆதரவு தரவில்லை என்றால் நான் இங்கு இருக்க மாட்டேன் "என்று பேசி கூடி இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.இவருடைய இந்த வார்த்தைகளும் அதிகாரிகளை சம்பந்தப்படுத்தி தான் உள்ளது.இதுவரை நேரடியாக ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துக்களை வெளியிடா விட்டாலும்.இருவரும் தனித்தனியாக வெளியிடும் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக தான் இருந்து வருகிறது.

 சில நாட்களுக்கு காரைக்காலுக்கு ஆளுநர் வருகை தருவதாக செய்தி வெளியானது .அன்றே சாலைகளின் ஓரம் உள்ள குப்பைகள் எல்லாம் அகற்றப் பட்டு விட்டன.அவர் புதுச்சேரி திரும்பும் வரை காரைக்கால் மாற்றத்துடன் இருந்ததை உணரமுடிந்ததாக பல்வேறு தரப்பு மக்களும் கூறியிருந்தனர்.

எது எப்படியோ இந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறைந்து கிரண்பேடி அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து அதனை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான புதுச்சேரி மக்களின் கருத்தாக உள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...