தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தொடர்ந்து மூடப்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள் ஒரு பார்வை

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாகவே மூடப்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளின் அளவு அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.ஆனால் தற்பொழுது இயங்கி கொண்டு இருக்கும் கல்லூரிகளில் அணைத்து துறைகளிலும் மாணவர்கள்  முழு அளவில் சேர்ந்து பயன் அடைகிறார்களா என்று பார்த்தோமேயானால் இல்லை என்பதே உண்மை.இன்னும் ஒரு சில கல்லூரிகளில் குறிப்பிட்ட சில துறைகளில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டு வருகிறது.பொறியியல் கல்லூரிகளை பொறுத்த வரை உதவி பேராசிரியராக பணியாற்ற குறைந்தபட்சம் குறிப்பிட்ட அந்த துறை அல்லது அதனை அடிப்படையாக கொண்ட துறையில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அதன்  அடிப்படையில் பார்க்க போனால் ஒவ்வொரு கல்லூரி மூடப்படும் பொழுது பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பும் அழிக்கப்படுகிறது.

உலகில் இங்கே தான் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கவும் அதனை மூடிவிட்டு செல்லவும் மிக சுலபமான விதிமுறைகளும் சட்ட திட்டங்களும் பின்பற்றப்பட்டு வருகின்றன போல.வியாபாரம் சூடு பிடிக்கும் பொழுது போட்டிப் போட்டுக்கொண்டு கல்லூரிகளை ஆரம்பிக்கின்றனர் பின்னர் வீழ்ச்சி கண்டவுடன் இழுத்து மூடி விடுகின்றனர்.வியாபாரிகள் கல்லாக்கட்ட வருங்காலத்தில் பொறியியல் துறையில் தான் வாய்ப்புகள் அதிகம் என்று சில ஒரு வித மாயை உருவாக்கினர்.இளைஞர்களை கனவு காண செய்தனர்.ஏழை இளைஞர்கள் என்ன கனவு காண வேண்டும் என்பதைக்கூட இங்கே வியாபாரிகள் தான் முடிவு செய்வார்கள் போல.இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் இந்த கொடிய செயலில் மாநில  அரசுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு ஏ.ஐ.சி.டி.இ க்கும் உள்ளது.

மக்களுக்கு சரியானவற்றை வழங்குவது அரசின் கடமை என்று உணராத சிலர் நீங்கள் தானே படித்தீர்கள்? நீங்கள் தானே ஆசைப்பட்டீர்கள் ? என்று கேள்வி எழுப்புகின்றனர்.அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை தான் நான் கேட்க விரும்புகிறேன்.அது எவனாவது தெரிந்தே ஏமாற விரும்புவானா? அதுமட்டும் இல்லாமல் மக்கள் ஆசைப்பட்ட அத்தனை விஷயங்களுக்கும் அரசு செவி சாய்த்தது கிடையாது.பல நல்ல காரணங்களுக்காக ஆரம்பித்த போராட்டங்களை கூட முடக்கியிருக்கிறது. சமீபத்தில் ஒரு திரைப்படம் ஒன்று பார்த்தேன்.அந்த திரைப்படம் எப்படி இருந்தது என்பதை விட அதில் எடுத்துக்கொண்ட முக்கிய விஷயம் இந்த வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வியாபாரமாக்க படுவது பற்றியது தான்.அதனைப் பற்றி இன்னொரு இடுகையில் உங்களுடன் விரிவாக பகிர்கிறேன்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க நடப்பு ஆண்டில் புதியதாக 54 கலை கல்லூரிகள் தொடங்க வாய்ப்பு இருக்கிறதாம்.புதிய கலை கல்லூரிகள் தொடங்க அரசுக்கு விண்ணப்பம் வந்த வண்ணம் உள்ளதாம்.இப்படியே போனால் இன்னும் பத்து ஆண்டுகளில் பொறியியல் படிக்க இருக்கும் கல்லூரிகள் போதாது என்று நினைக்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...