தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி மாரத்தான் போட்டி

ஒலிம்பிக் போட்டிகளை தொலைக்காட்சியில் பாத்துக்கொண்டு அடச்சே...என்ன ஓடுறானுங்க நான் மட்டும் ஒலிம்பிக்கில் ஓடியிருந்தா தங்கம் நிச்சியம் என்று கூறிக்கொண்டே ஒரு தட்டு நிறைய பஜ்ஜியை காலி செய்து கொண்டு இருப்பவர்களுக்கும்,நான் கண்டிப்பாக விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வமுடன் உள்ளவர்களுக்கும்,மாரத்தான் பந்தயத்துக்காக புதுச்சேரியில் காத்திருப்பவர்களுக்கும் ஒரு நர்ச்செய்தி புதுச்சேரியில்  நாளை அதாவது 21/08/2016 அன்று காலை 5:30 மணிக்கு புதுச்சேரி ஜிப்மரில் தொடங்கி காந்தி சிலை வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.

ஜிப்மர் மாணவர்கள் சங்கம், புதுச்சேரி போக்குவரத்து போலீஸார் மற்றும் சர்வதேச அரிமா சங்கம் போன்றவற்றால் இணைந்து நடத்தப்படும் இப்போட்டி ஏ,பி,சி ,டி என நான்று பிரிவுகளாக நடக்க உள்ளது.ஏ பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோரும் பி பிரிவில் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொள்கின்றனர் இவர்களுக்கான பந்தய தூரம் 8.5 கி.மீ.இதைப்போன்று சி பிரிவில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள்  பங்கேற்கின்றனர் அவர்களுக்கான பந்தய தூரம் 4.5 கி.மீ மற்றும் டி பிரிவில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள்  2.5 கி.மீ ரை  பந்தய தூரமாக கொண்டு பங்கேற்கின்றனர்.ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் மூன்று இடங்களுக்கு பரிசு தொகையாக மொத்தம் 1.9 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...