தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தமிழ்நாடு பிரிமியர் லீக் 2016 ஒரு பார்வை

ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து சென்னை அணி தடை செய்யப் பட்டவுடன் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து போயிருந்த ரசிகர்களுக்கு தெம்பூட்டும் வகையில் இந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இந்த விளையாட்டு தொடரில் ஆல்பர்ட் தூத்தி பாட்ரியாட்ஸ் (Albert Tuti Patriots ),சேபாக் சூப்பர் கில்லிஸ் (Chepauk super Gillies ),லைகா கோவை கிங்ஸ் ( Lyca Kovai Kings),மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ் (Madurai Super Giants),ரூபி காஞ்சி வேரியர்ஸ் (Ruby Kanchi Warriors), வி.பி திருவள்ளூர் வீரன்ஸ் (VB Thiruvallur Veerans), திண்டுக்கல் டிராகோன்ஸ் (Dindigul Dragons)  மற்றும் காரைக்குடி காலை ( Karaikudi Kaalai) என ஏழு அணிகளுமே தமிழகத்தை சேர்ந்த முக்கிய நகரங்களின் பெயர்களில் அமைந்துள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் இதனால் என்ன பயன் என்று கேள்வி கேட்கும் பொது மக்களுக்கு , " என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் இந்த போட்டிகள் நடத்தப் படுவதால் நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது ,அவர்களின் தரம் உயர போகிறது இன்னும் எவ்வளவோ  நன்மைகள்  நமது தமிழ் நாட்டிற்கு இதன் மூலம் கிடைக்கப் போகிறது  .நீங்கள் என்ன வென்றால் இப்படி கேள்வி கேட்கிறீர்களே " . மக்களே இந்த பதிலை நான் கூறவில்லை இதை கூறுபவர்கள் யார் என்றால் தொலைக்காட்சி ஊடகங்கள்,சினிமா பிரபலங்கள் ,கிரிக்கெட்டின் மீது அதிக மோகம் கொண்ட அப்பாவி இளைஞர்கள் இவை அனைத்திற்கும் மேலாக இந்த போட்டிகள் நடத்தப்படுவதால் மிகப்பெரிய அளவில் ஆதாயம் அடையுபோகும் ஒரு சில பெரிய நிறுவனங்கள்.

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க இவர்கள் நடத்தும் இந்த கிரிக்கெட் போட்டியின் அறிமுக விழாவை பார்த்தால் இவர்கள் கூறிய காரணங்களுக்காக மட்டுமே  நடத்தப்பட உள்ளதாக தெரியவில்லை. கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து இவ்வளவு விளமபரங்கள்  செய்து இந்த போட்டிகளை நடத்துவதற்கு இவர்கள் சொல்வதா காரணமாக இருக்க முடியும்.

அணிகளின் பெயர்களில் ஊரின் பெயர்களை வைத்து நமது உணர்வுகளை அவர்களுக்கான ஊதியமாக்குகிறார்கள் கொஞ்சமல்ல கோடிக்கணக்கில். ஐ.பி.எல் போட்டிகளில் இருந்தே இந்த கொடுமை தான் அரங்கேறி வருகிறது .சென்னை அணி  ஐ.பி.எல் லில் விளையாடகூடாது என  சில ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது,இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அடுத்து ஒரு விளையாட்டு வியாபாரத்தை துவக்கி விட்டார்கள்.

நாம் என்ன தான் இங்கு விவாதித்தாலும் யாரும் இந்த விளையாட்டு போட்டிகளை வெறுத்து ஒதுக்கப் போவது இல்லை.குறைந்தபட்சம் இந்த போட்டிகளிலாவது ஜாதி அடிப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பார்ப்பனவர்களை தவிர மற்றவர்களையும் கொஞ்சம் ஏற்றி விட்டால் நன்றாக இருக்கும்.

மக்களை சிந்திக்க விடாமல் செய்யவே பொழுது போக்குக்கு மிக அதிக  முக்கியத்துவம் இங்கு வழங்கப்பட்டு வருகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...