தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தீராத (சுதந்திர) தாகம் என்று தணியும்?

நாளை நமது நாட்டின் எழுவதாவது விடுதலை நாள் விழா அணைத்து இடங்களிலும் சிறப்பாக கொண்டாடபட உள்ளது.நம் நாடு விடுதலை அடைவதற்காக பல்வேறு தியாகங்கள் செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுவதாக சொல்லப்படுகிறது.தியாகிகளை நினைவு கூறுவது தப்பில்லை ஆனால் அவர்கள் செய்த தியாகங்கள் எதற்காக என்பதைத்தான் மறந்து விட்டோம்.கொடியேற்றி வெறும் இனிப்பு வழங்கும் நாளாகத்தான் இது  பார்க்கப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

இன்று தொலைக்காட்சியில் நீதித்துறையை பற்றிய ஒரு விவாதத்தில் தோழர் ஒருவரின் கருத்து நீதித்துறையும் தாண்டி அணைத்து துறைகளுக்கும் பொருந்தும் என்று தோன்றியது.புதிய பொருளாதார கொள்கை பற்றியது அது. அது என்னவென்றால்மத்திய அரசின் நிலைப்பாடு புதிய பொருளாதார கொள்கைக்கு முன் ஒரு மாதிரியும் பிறகு மற்றொரு மாதிரியும் மாறியிருக்கிறது.அந்த பொருளாதார கொள்கைக்கு முன்பு வரை மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த மத்திய அரசு அந்த கொள்கைக்கு பிறகு கார்ப்பரேட் நிறுவங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.அவர் கூறியது நீதித்துறையில் ஆனால் இது அணைத்து துறைகளுக்கும் பொருந்த தான் செய்கிறது.மக்களாட்சி என்கிறார்கள் அப்பொழுது அதிக அதிகாரம் பொருந்திய மக்கள் படகில் ஏறி அருகில் இருக்கும் அந்தோனியார் கோவிலுக்கு சென்றுவர அரசாங்கத்தின் பதிலுக்கு மனுபோட்டு காத்திருக்க வேண்டுமா .பலகோடி தமிழர்களை ஒரு நாட்டில் கொன்று குவித்தவன் நம் நாட்டுக்கு விருந்தாளியாக வரும் பொழுது நாம் போராட்டம் எதுவும் செய்து விட கூடாது மீறினால் நாம் தண்டிக்கப் படுவோம்.இப்படி விவசாயம்,காவேரி நீர்,முல்லை பெரியாறு,ஜல்லிக்கட்டு போன்ற பல விஷயங்களுக்கும் மக்கள் போராட கூடாது போராட்டம் ஆரம்பித்தாலும் அது பல அடக்குமுறைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.மக்களாட்சியில் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உள்ளவர்கள் அதிகாரிகள் அவர்கள் யார் பக்கம் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகும் ஆட்சியாளர்களிடம் அதிகாரிகளும் அதிகாரிகளிடத்தில் மக்களும் அடிமைகளாக தான் உள்ளனர்.இதையெல்லாம் பார்க்கும் பொழுது தியாகிகள்  செய்த தியாகங்களை யாரோ தனக்கு சாதகமாக்கி கொண்டதுபோல தோன்றுகிறது.இதைப்பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம் ஆனால் நாவறண்டு தாகம் எடுக்கிறது அது நீர் குடித்தால் சரியாகி விடும்.உள்ளத்திலும் ஒரு தாகம் உண்டு அது தீராத தாகம்.அந்த தாகம் பலருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...