தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சர்வதேச நகரங்களில் சென்னை 30வது இடம்

குளோபல் டெஸ்டினேஷன்ஸ் சிட்டிஸ் இண்டக்ஸ் (Global Destinations Cities Index ) இதைப்பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா.ஆம் என்றால்  இது உங்களுக்கு கொஞ்சம் பழைய செய்தியாக இருக்கலாம்.குளோபல் டெஸ்டினேஷன்ஸ் சிட்டிஸ் இண்டக்ஸ் என்பது உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தளங்களை மதிப்பீடு செய்ய பயன்படும் ஒரு குறியீடு.பல்வேறு தகுதிகளை பரிசீலனை செய்து மாஸ்டர் கார்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சுற்றுலா நகரங்களின் பட்டியலை வெளியிடும்.அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிடப் பட்ட 100 நகரங்களை கொண்ட பட்டியலில் தமிழகத்தின் தலை நகரான சென்னைக்கு 30வது இடம் கிடைத்துள்ளது.கடந்த வாரம் ஆறாவது முறையாக வெளியான இப்பட்டியலில் சென்னை உட்பட இந்தியாவை சேர்ந்த மேலும் ஐந்து நகரங்களும் இடம்பெற்றுள்ளன அதன்படி மும்பை 27 வது இடத்திலும் டில்லி ,கொல்கத்தா ,புனே ஆகிய நகரங்கள் முறையே 48,62 மற்றும் 91வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

இதே மாஸ்டர் கார்டு நிறுவனம் வெளியிட்டுள்ள வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா நகரங்கள் என்ற மற்றொரு பட்டியலில் சென்னை 19வது இடத்திலும் மும்பை 14வது இடத்திலும் இடம்பெற்று உள்ளது.சரி அப்பொழுது முதல் இடத்தில் இருக்கும் நகரம் எது என்று கேட்கிறீர்களா உங்களுக்கான பதில் கீழே.


உலகின் சிறந்த முதல் 10 சுற்றுலா நகரங்கள் 2016
  1. பாங்காக் 
  2. லண்டன் 
  3. பாரிஸ் 
  4. துபாய் 
  5. நியூயார்க் 
  6. சிங்கப்பூர் 
  7. கோலாலம்பூர் 
  8. இஸ்தாம்பூல் 
  9. டோக்கியோ 
  10. ஸீயூல் 

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...