தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் யார் என்று தெரியுமா?

போர்ப்ஸ்(Forbes ) நிறுவனம் தனது பத்திரிக்கையில் இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் யார் என்பதை அவர்களின் சொத்து மதிப்பை கொண்டு கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. அதன்படி 15 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை  பிடித்துள்ளார்.இவரை அடுத்து 11 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் திலிப் சங்வி இரண்டாம் இடம் பிடித்துள்ளார் இவர் பல மருந்து துறை உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்.இவரை அடுத்து  10.1 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் இந்துஜா சகோதர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர் அஷோக் லைலாண்ட் நிறுவனம் இந்த குழுமத்தை சார்ந்ததுதான்.

நான்றாவது இடத்தை 10 லட்சம் கோடி ருபாய் சொத்துக்களுடன் அசிம் பிரேம்ஜி பிடித்துள்ளார். 9.31 லட்சம் கோடி சொத்துக்களுடன் பல்லோன்ஜி பிஸ்திரி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.இதற்கு அடுத்தபடியாக 8.37 லட்சம் சொத்துக்களுடன் லண்டன் வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.கோத்ரேஜ் குடும்பம் 8.31 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்குளுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.


ஹச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் 7.64 லட்சம் கோடி சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.இதற்கு அடுத்த படியாக குமார் பிர்லா 5.89 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.இறுதியாக பத்தாவது இடத்தை 5.76 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் சைரஸ் பூனவாலா பிடித்துள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...