தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

என்னது தமிழகத்தில் தோனிக்கு டிக்கெட் இல்லையா.....!

நாளை பாகிஸ்தானை தவிர்த்து உலகெங்கும் வெளியாக உள்ள கிரிக்கெட் வீரர் தோனியின் வாழக்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தோனி - The Untold Story.இந்த திரைப்படம் தமிழகத்தில் வேற்று மொழி திரைப்படங்களுக்கு பெருமளவு வரவேற்பு கிடைக்காது என்ற வரலாறையே மாற்றும் அளவுக்கு பெரும்பாலான திரையரங்குகளில் திரைப்படத்தின் டிக்கெட்டுக்கள் அனைத்தும் மல  மல வென விற்று தீர்ந்து விட்டதாம்  .திரையரங்கு வாயிலில் காத்து கிடைக்கும் ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவாம் .இணையத்தில் வாயிலாக பெரும்பாலான மக்கள் முன்பதிவு செய்துவிடுவதால் தான் இந்த நிலை என ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனராம்.இப்படியெல்லாம் செய்தி வெளியிட்டு அந்த திரைப்படத்தின் வெற்றிக்கும் வசூலுக்கும் பாதை போட்டு கொடுக்கின்றன இன்றைய ஊடகங்கள்.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை,தமிழக முதல்வரின் உடல் நிலை,ரயில்களின் வேகம் அதிகரிப்பு என பல செய்திகள் இருந்தும் இந்த திரைப்படத்தை முன்னிலை படுத்துவத்திலே தான் ஆர்வம் காட்டி வருகின்றனர் அது ஏன் என்று தான் தெரியவில்லை.தோனி ஒரு சிறந்த விளையாட்டு வீரர்,அவரது வாழ்க்கையை படமாக்கி அதன் மூலம் பணம் சம்பாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நம் மக்களுக்கு கிரிக்கெட் மீதும் சினிமா மீதும் இருக்கும் மோகத்தை பயன்படுத்தி இரண்டையும் இணைத்து ஐ.பி.எல் என்று நடத்தி மக்களின் பணத்தை கொள்ளையடித்தார்கள் தற்பொழுது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கி வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.இதற்கு பிறகு சச்சின் வாழ்க்கையை பற்றிய ஒரு திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...