தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

விடியலை தேடும் தனியார் நிறுவன ஆசிரியர்கள்

உலக நாடுகள் அனைத்திலும் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு வடிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு நன்றி செலுத்தும் வகையில் வருடத்திற்கு ஒருமுறை ஆசிரியர் நாள் என்று கொண்டாடப் பட்டு வருகிறது அவ்வகையில் இன்று நமது இந்திய நாட்டின்  முன்னாள் மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தாம் நாளை  ஆசிரியர் தினமாக அறிவித்து  ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது.இது உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான்.ஆசிரியர் நாள் கொண்டாடும் நாம் ஆசிரியர்களின் இன்றைய நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.நம் நாட்டை பொறுத்த வரையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்வி கற்பிக்கும் அனைவரையும் அதிர்ஷ்டசாலிகளாகவே பார்க்கிறோம்.அதற்கு முக்கிய காரணம் இன்றைய கால கட்டத்தில் நாம் இன்று நம் கடமையை செம்மையாக செய்து விட்டோம் என்ற மன நிறைவு ஆசிரியர் பணியில் மட்டுமே கிடைக்கும் அது மட்டுமில்லாமல் அவர்களது மாத ஊதியம்.நமது அரசாங்கம் மற்ற பணிகளுடன் ஒப்பிடுகையில் ஆசிரியர்களுக்கு அதிக பட்ச ஊதியத்தை தான் நிர்ணயிக்கும்.அந்த ஊதியம் தங்களுக்கு போத வில்லை என்று ஆசிரியர்களில் ஒரு தரப்பு(அரசு  ஊழியர்கள்) வகுப்பு துறப்பு ,போராட்டம் என்று நிகழ்த்தி கொண்டு இருக்கும் பொழுது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களோ தங்களுக்கு இந்த மாதமாவது ஊதியம் கைக்கு கிடைக்குமா என்று புலம்ப வேண்டிய நிலை உள்ளது.பலர் மனதளவிலும் உடல் அளவிலும் தளர்ச்சியடைந்து விடுகின்றனர்.ஆனால் அந்த சூழ் நிலையிலும் சிலர் நிர்ணயிக்கபட்ட எட்டு மணி நேரத்துக்கு பிறகும் உழைக்கிறார்கள்.எந்த நிலையிலும் மாணவர்களிடம் தங்கள் கஷ்டத்தை காட்டிக் கொள்ளாமல் சிரிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தனியார் நிறுவன ஆசிரியர்களுக்கு தான் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து வரக்கூடிய பிரச்சனைகளும் அதிகமாக உள்ளது.ஒரு அரசு பள்ளி ஆசிரியர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை எதிர்த்து வாதம் செய்யலாம் ஆனால் பல இடங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அதற்கான சந்தர்பமே  வழங்கப்படுவது கிடையாது.அரசு பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் பத்தில் ஒரு பங்கு சம்பளத்தில் தான் இன்று பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர் ஆசிரியைகள் பணியமர்த்த படுகிறார்கள்.வருடத்தில் ஆசிரியர்களின் தியாகத்தை நினைவு கூற ஒரு தினத்தை ஒதுக்கிய  நாம் பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஏனோ மறந்துவிட்டோம் .

நாளைய எதிர்காலம் மாணவர்கள் கையில் அந்த மாணவர்களை வடிவமைக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் போற்றுவோம்.குறிப்பாக கடும் கஷ்டத்திலும் நெருக்கடியிலும் சிரித்துக்கொண்டே தன்னை வருத்தி நம்மை உயர்த்த நினைக்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை வணங்குவோம்.

குறிப்பு : நான் எந்த தனியார் நிறுவனத்திலும் ஆசிரியராக பணியாற்ற வில்லை.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...