தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

முகநூலில் மத பிரச்சாரங்கள்

இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் ஒரு செய்தியை விரைவாகவும்  அதிக எண்ணிக்கையிலும்  கொண்டு சேர்ப்பதில் தொலைக்காட்சி ஊடகங்களை விட சமூக ஊடகங்களே அதிக பங்காற்றி வருகின்றன.அந்த சமூக ஊடகங்களில் அதிகமான இளைஞர்களால் பயன்படுத்தபட்டு வருவது முகநூல்.சமீப காலமாக முகநூலில் மத பிரச்சாரங்கள் புரிபவர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது,எண்ணிக்கை அடிப்படையிலும் அவர்கள் அதிகரித்து வருகின்றனர்.இதனால் என்ன பிரச்சனை சமூக ஊடகங்கள் என்பதே சமூகத்தின் பிரதிபலிப்புத்தானே.நமது சமூகத்தில் மத பிரச்சாரங்கள் என்பது அன்றாடம் நிகழும் ஒன்றுதானே.முகநூலில் மத பிரச்சாரங்கள் மேற்கொள்வதில் என்ன தவறு உள்ளது ? என்று நம்மையே எதிர் கேள்வி கேட்கும் சில பேர் அதிகரித்துவிட்டனர்.

சரி முகஸ்ருதி,தனி மனித வழிபாடு,சினிமா மோகம் போன்ற சமூக இடர்பாடுகள் அதிகமாக உள்ள சமூக ஊடகங்களில்  மத பிரச்சாரங்களை கூட பொறுத்துக் கொள்ளலாம்.ஆனால் அதற்காக அவர்கள் கையாளும் உத்திகள் சமூக ஒற்றுமையை குலைக்கும் அளவு உள்ளது.உதாரணமாக ஏதாவது தவறு செய்த ஒருவரை இவர் இந்த மதத்தை அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவை சார்ந்தவர் என விளம்பரம் செய்கின்றனர் சிறிது நேரத்தில் இவர் எங்கள் மதத்தை சார்ந்தவர் அல்ல இவர் மற்றொரு மதத்தை சார்ந்தவர் என்று புகைப்படத்துடன் செய்தி வெளியிடுகின்றனர் இவைகள் அனைத்தையும் தங்கள் மதத்தின் மீது நேசமும்,மரியாதையும் கொண்ட அப்பாவி இளைஞர்கள் தங்கள் நண்பர்களிடம் பகிர்கின்றனர்.இவர்கள் பகிரும் செய்திகள் பிற மதத்தை சேர்ந்த நண்பர்களின் பக்கங்களிலும் தோன்றுகிறது இதனால் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.சில நேரங்களில் நேரடியாகவே கருத்து மோதல்களும் ஆரம்பமாகிறது.அந்த பதிவை உண்மையில் யார் பதிவேற்றம் செய்தது என்று கூட தெரியாத அப்பாவி இளைஞர்கள் அவர்களின் நண்பர்களிடமே கருத்து மோதலில் ஈடுபடுகிறார்கள் அதை பதிவும் செய்து விடுகிறார்கள்.இந்த நிகழ்வை பார்க்கும் அவர்களின் நண்பர்களின் நண்பர்களிடம் கூட இது பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.இவை ஒருபக்கம் இருக்க ஒரு சிலர் ஏதாவது ஒரு புகைப்படத்தை கணினி உதவியுடன் மாறுதல் செய்து அசாதாரணமான ஒரு உருவம் கொண்ட அல்லது நோயுற்றவர்களின் புகைப்படமாக அது மாற்றப்பட்டு ஏதேனும் மத தொடர்புடைய ஒரு வாசகத்தை கருத்து பெட்டகத்தில் இன்னும் சில நொடிகளில் பதிவு செய்யுங்கள் அல்லது பகிர்வு செய்யுங்கள் இல்லையெனில் உங்களுக்கு கேடு அல்லது நன்மை பிறக்கும் என்றெல்லாம் மக்களை பீதியடைய செய்து தங்கள் மதத்தை பிரபல படுத்துகின்றனர்.கருத்து பெட்டகத்தினுள் பதிவு செய்ய சொல்வதை கூட பொறுத்துக்கொள்ளலாம்.ஆனால் அவர்கள் மாறுதல் செய்த புகைப்படம் அவ்வளவு கொடுமையாக உள்ளது நம் மன நிலையையே மாற்றி அமைத்து விடுவது படி உள்ளது.இவைகளெல்லாம் ஒரு உதாரணம் தான்.முக நூலில் மத பிரச்சாரம் செய்வோர் பயன்படுத்தும் உத்திகள் இன்னும் ஏராளம்.அவற்றில் சில மத பிரச்சாரம் என்ற வாடையே இல்லாமல் இருக்கும்.ஆனால் அதுவும் அதேதான்.

ஒரு குற்றம் செய்தவனின் அடையாளம் அவன் செய்த குற்றம் மட்டுமே.அவன் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ ,பிரிவையோ சார்ந்து இருப்பதினாலேயே அவன் அந்த குற்றத்தை புரிந்தான் என்று எவராலும் கூறிவிட முடியாது.தவறு செய்பவனுக்கு எந்த மதத்தின் அடையாளமும் கிடையாது.சிலர் மதம்,ஜாதி என்ற போர்வையை கொண்டு அவர்களது உண்மை அடையாளங்களை மறைக்க நினைக்கிறார்கள்.அவற்றை கொண்டு மறைக்க தான் முடியும் ஆனால் செய்த தவறுகளை காலப் பதிவில் இருந்து முற்றிலும் அழித்து விட முடியாது.

முடிந்தவரையில் பார்க்கின்ற பதிவை எல்லாம் நண்பர்களுக்கு பகிராமல்.நட்பை வளர்க்கவும் ,நெருக்கத்தை உருவாக்கவும் பயனுள்ள பதிவுகளை பகிர்ந்து மகிழுங்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...