சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் தனது தளத்தில் எழுதியிருந்த திரைவிமர்சனம் ஒன்றை படித்தேன் அதில் இது இந்த இயக்குனரின் முதல் கமர்ஷியல் திரைப்படம் என்று ஒரு வாக்கியத்தை எழுதியிருந்தார்.அப்பொழுது தான் எனக்கு தோன்றியது சினிமா என்கின்ற விஷயமே கமர்ஷியல் தானே இதில் எப்படி ஒரு திரைப்படத்தை இது கமர்ஷியல் திரைப்படம் இல்லை என்று கூறமுடியும்.ஒரு திரைப்படம் உருவாக பலர் பாடுபட்டு உழைக்கிறார்கள் அவர்களுக்கான ஊதியத்தை ஒருவர் கொடுக்கிறார் பிறகு அந்த திரைப்படத்துக்கு உரிமையுள்ளவர் ஆகிறார்.பிறகு அந்த திரைப்படத்தை விநியோகஸ்தர்களிடம் விலை பேசி விற்கிறார்.விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு படப்பெட்டியை வழங்குகின்றனர்.திரையரங்க உரிமையாளர்கள் படத்தை திரையிட்டு மக்களிடம் தலைக்கு இவ்வளவு என்று பணத்தை வாங்குகின்றனர்.ஆக ஒரு திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருப்பது பணம் தான்.திரைப்படத்தை உருவாக்க உழைப்பவர்கள் அனைவருக்கும் சமமான சம்பளம் கிடையாது யாரை வைத்து அதிகமாக வர்த்தகம் செய்ய முடியுமோ அவருக்கு அதிகமான ஊதியம் வழங்கப்படுகிறது.இப்படி எல்லா வகையிலும் வியாபாரத்தை முன்னிலை படுத்தியே இயங்கும் ஒரு துறையினால் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பை எதை வைத்து இது கமர்ஷியல் இல்லை என்று கூறமுடியும்.
இன்றைய சூழலில் ஒரு வரலாற்று திரைப்படத்தை கூட நிஜம் மாறாமல் அப்படியே பதிவு செய்து விட முடியாது.உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முன்னாள் முதல்வர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப் பட்டது அந்த காலகட்டத்தில் அன்றைய பிரதமர் அவரை பத்திரிக்கையாளர்களிடம் உதாசினப் படுத்தி பேசிய காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.அதனாலயே அந்த திரைப்படம் சரியான நேரத்தில் வெளிவர முடியாமல் போனது. வரலாற்று படத்திலும் காதல் காட்சிகள்,பாடல்கள் தேவைப் படுகின்றன.ஆக மொத்தத்தில் திரைப்படங்கள் அனைத்துமே கமர்ஷியல் நோக்கத்தோடு தான் எடுக்கப்படுகின்றன அதில் சமூக அவலங்களை பதிவு செய்வதும் ஒரு வகையான வியாபார யுக்தியாக தான் இருக்க முடியும்.