தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

E சேட் பிரியாணியும் 21G பேருந்தும்

அசைவ உணவு பிரியர்களிடம் பயணம் மேற்கொள்ளும் பொழுது நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு என்னவென்று கேட்டால் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் பேர் யோசிக்காமல் நொடி பொழுதில் கூறுவது பிரியாணி.அந்த பிரியாணியின் சுவை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் , நகரத்திற்கும் ஏன் அதை சமைக்கின்ற ஒவ்வொரு நபரின் கை பக்குவத்தை பொறுத்து மாறுதல் அடையக்கூடியது.இந்த சுவை மாறுதலுக்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் அவர்கள் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் அளவும் அதனை சேர்க்கின்கின்ற நேரமும்தான்.

காரைக்கால்,நாகப்பட்டினம்,நாகூர் போன்ற நகரங்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள்.அந்த பகுதிகளில் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விழாக்களின் பொழுது பிரியாணி செய்ய வேண்டும் என்றால் அணுகுவது பண்டாரிகளைத்தான்.அந்த பண்டாரிகள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகவே இருப்பார்கள்.அவர்கள் சேர்க்கும் மசாலா பொருட்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பார்கள்.அந்த மாசாலாவுடன் சேர்ந்த மாமிச துண்டை உண்ணும் பொழுது அதன் சுவையே அலாபிதான்.அதனாலேயே நான் வெளியூர் செல்லும் பொழுது பிரியாணியை வேறு எங்கும் சாப்பிடுவது கிடையாது.

சென்னையில் தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றிய சமையம் ஏன் அந்த பணியை செய்கிறோம் என்றே தெரியாமல் வருகின்ற சம்பளத்தை செலவு செய்யவும் நேரம் இல்லாமல் காலம் உருண்டோடிய தருணம்.நான் பணியாற்றிய டைடல் பார்க்கில் கீழே தரைத்தளத்தில் நிறைய உணவகங்கள் உண்டு அலுவலகத்தில் விசாரித்த பொழுது மாமிச உணவுகள் விருதுநகர் என்ற உணவகத்தில் கிடைக்கும் என்று கூறினார்கள்.நானும் ஆர்வத்துடன் தரைதளத்துக்கு சென்று பிரியாணியை ஆர்டர் செய்து வாங்கினேன் புரோட்டாவிற்கு  அவர்கள் கொடுக்கும் குழம்பில் அரிசியை கிண்டி வேகவைத்து தனியாகவும்.மாமிச துண்டை அவித்து அதை அந்த புரோட்டா குருமாவில் போட்டு ஊர வைத்து அதை இந்த அரிசியுடன் சேர்த்து பிரியாணி என்று கொடுத்திருக்கிறார்கள் போல அதன் விலை அந்த கால கட்டத்தில் 75 ரூபாய்.ஒரு வேலை தொழில் நுட்ப பூங்காக்களில் இருக்கும் உணவகங்கள் அனைத்திலும் இப்படி தான் தயாரிப்பார்களோ என்னவோ.

பிறந்த ஊரில் போதும் போதும் என்று கூறிய சுவையான பிரியாணியை சென்னையில் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.ஒருநாள் சென்னை குரோம்பேட்டை பகுதியில் நடந்து செல்லும் பொழுது ஒரு சிறிய பிரியாணி கடையை பார்தேன் இன்று இருப்பது போல அப்பொழுது குரோம்பேட்டில் அதிக உணவகங்கள் கிடையாது .அதன் பெயர் E சேட் பிரியாணி அந்த நேரம் நன்றாக பசிக்கவும் செய்தது உடனே கடைக்குள் சென்று ஆர்டர் செய்தேன் .ஆர்டர் செய்த சில நொடிகளில் பிரியாணியை பிளேட்டுடன் பரிமாறினார்கள்.சாப்பிட்டு பாத்தேன் அப்படி ஒரு ருசி அவர்கள் பிரியாணியுடன் வழங்கிய கத்திரிக்காய் அருமை.அந்த கத்திரிக்காயை மட்டும் தனியாகவே வாங்கி சாப்பிடலாம் போல் இருந்தது.இது காரைக்கால் பிரியாணி போல் மசாலாவிற்கு அதிக முக்கிய துவம் கொடுத்து செய்யப்பட்ட பிரியாணி கிடையாது இருந்தாலும் அதன் ருசி என்னை கவர்ந்தது.அதற்கு காரணம் தக்காளி மற்றும் இன்ஜி பூண்டின் அளவாகத்தான் இருக்கமுடியும்.இந்த பிரியாணியில் உள்ள அரிசி சாறு நிறைந்ததாக இருந்தது காரைக்கால் பிரியாணி அப்படி இருக்காது.நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட்டேன் பிறகு கடையில் இருந்து வெளியே வந்து நூறு ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்தேன் அவர் திருப்ப என்னிடம் 70 ரூபாய் கொடுத்தார் அந்த சுவையான பிரியாணியின் விலை வெறும் 30 ருபாய் தானா என்ற  திருப்தியுடன் அப்படியே நடந்து குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன் அங்கே 21G பேருந்து வந்தது.அது பிராட்வே வரை செல்லும் பேருந்து அதில் ஏறினேன் எனக்கு ஒரு ஜன்னல் ஓர இருக்கை கிடைத்தது பேருந்து நடத்துனரிடம் 10 ரூபாய் கொடுத்தேன் அவர்  ஐந்து ரூபாயை திருப்பி கொடுத்து பிராட்வே வரை செல்ல டிக்கெட் வழங்கினார்.அது ஒரு ஒன்றைரை மணி நேர சந்தூஷமான பயணம்.பிராட்வே வந்தவுடன் ஏன் இவ்வளவு சீக்கிரமாக வந்துவிட்டோம் என்று கூட தோன்றியது.வெறும் 35 ரூபாயில் கிடைத்த அந்த சந்தூஷமான பொழுதை இன்று கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் வாங்க முடியாது.அன்று முதல் வாரத்திற்கு ஒரு முறையாவது E சேட் பிரியாணியும் 21G பேருந்தும் எனது வழக்கமானது.ஒரு வருடத்திற்கு பிறகு வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பினேன்.ஆனால் எப்பொழுது எல்லாம் சென்னைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுது எல்லாம் நான் தேடி சென்று சாப்பிடும் ஒரே உணவகம் இந்த E சேட் பிரியாணி கடை தான்.

சமீபத்தில் குரோம்பேட்டை சென்ற பொழுது E சேட் பிரியாணி கடைக்கு சென்று இருந்தேன் தற்பொழுது அங்கு பிரியாணியின் விலை 130 ரூபாய் சாப்பிட்ட பிரியாணியில் சிறிது காரம் கூடி இருப்பதை உணர்ந்தேன்.என் வயிறுக்கு அது ஒத்துக்கொள்ள வில்லை.ஒரு வேலை என் வயிறு தான் சரியில்லையா அல்லது பிரியாணியில் தான் எதாவது மாற்றம் நேர்ந்து இருக்கிறதா என்று தெரியவில்லை.எதுவாயினும் 12 ஆண்டுகளுக்கு முண் நடந்த அந்த நிகழ்வால்.இன்று E சேட் பிரியாணி கடையையும்  21G பேருந்தையும் நினைத்து பார்த்தாலே எனக்குள் அப்படியொரு சந்தோஷம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...